செவ்வாய், 3 ஜூலை, 2012

மனைவியை மயக்க ( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)


மனைவியை மயக்க ( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)
மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது.மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....




1. மதித்தல்
வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் ( வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி?




  2.கனவுகள்

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.( நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல் புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா?






  3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள்.



மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்( அதற்க்காக இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இது உனக்கொரு புதிய தங்கை என்று அதிர்ச்சி கொடுக்காதிர்கள்... பெண்பாவம் பொல்லாதது)




 4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்.


ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது( நண்பரே மனைவி அடிக்கும் போதல்லாம் அழுகாதிர்கள் சில சமயங்களில் சிரியுங்கள். நம்மாளுக்கு மண்டை கழண்டு போய்யிடுச்சுன்னு சில அடிகளோட தப்பிக்கலாம்)




5.ஆலோசனைக் கேளுங்கள்.

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். ( நண்பர்களே கருத்தை கேளுங்கள்& மதிப்பு கொடுங்கள் ஆனால் உங்கள் முடிவின் படி நடங்கள்)



6. சமைக்க கற்று கொள்ளுங்கள்.


பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ( நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)




7. பேசுங்கள்

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். ( நண்பர்களே உண்மை வாழ்வில் பெண்கள் பேசமட்டும்தான் செய்வார்கள். கேட்கமாட்டார்கள் அப்படியே கேட்டாலும் ஏதோ பேசும் சந்தோஷத்தில் உங்களின் புதிய கேர்ல் ப்ரெண்டைப் பற்றி உளறி மாட்டிக்கொள்ளாதிர்கள்)



8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்


உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். ( நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடுமட்டும் ஒத்துபோகாதிர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்)



ஆண்களுக்கு மட்டும்தான் என்று சொல்லியும் திருட்டுதனமா வந்து படித்த பெண்களே என்னிடம் சண்டைக்கு வாராதிர்கள். வந்ததுதான் வந்திர்கள் உங்கள் கருத்தை சொல்லிவிட்டு போங்கள். நண்பர்களே இந்த ஐடியாக்கள் வொர்க்கவுட் ஆனா வந்து பதில் போடுங்கள்.வொர்க்கவுட் ஆனா வந்து பதில் போடுங்கள். Download As PDF

திங்கள், 2 ஜூலை, 2012

உங்கள் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கா? இதைப் படித்து பார்த்து சொல்லுங்களேன்


உங்கள் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கா? இதைப் படித்து பார்த்து சொல்லுங்களேன்







உங்கள் வாழ்விலும் இப்படி நடந்து இருக்கா? இதைப் படித்து பார்த்து சொல்லுங்களேன்



எனக்கு என்னாச்சு?




என் நண்பர்கள் என்னை உரிமையோடு  டீ/டா என்று போட்டு கூப்பிடும் போது என்ன மரியாதை இல்லாமல் கூப்பிடுகிறார்கள் என்று நினைக்கும் நான் . அப்படி நீ என்னை உரிமையோடு  டீ/டா என்று போட்டு கூப்பிடும் போது மட்டும் மனம் சந்தோஷத்தில் குதிக்கிறதே ஏன்?


நண்பர்கள் ரோஜா கொடுக்கும் போது அது சாதாரணமான ரோஜாவாக தெரியும் எனக்கு . நீ கொடுக்கும் ரோஜா மலர் மட்டும் அற்புத மலராக தோன்றி மனம் எல்லாம் பூவாக மாறிவிடுகிறதே ஏன்?


நண்பர்கள் தொடும் போது எந்த உணர்வும் தோன்றாத எனக்கு நீ தொடும் போது மட்டும் சிலிர்த்து போகிறதே ஏன்?




திரைபடம் பார்க்கும் போது என் மீது தூங்கி விழும் நண்பர்களிடம் எருமைமாடு மாதிரி மேலே தூங்கி விழாதே என்று சொல்லும் நான். நீ என் மீது  படம் முடியும்வரை தூங்கி விழுந்தாலும் என்னடா படம் சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று நினைக்க தோன்றுகிறதே ஏன்?


போட்டோ எடுக்கும் போது நண்பர்கள் அருகில் நின்று தோளில் கையைப்போட்டு நிற்கும் போது சனியனே கொஞ்சம் என்னை மறைக்காமல் தள்ளி இருக்கிறாயா என்று சொல்லும் நான். நீ அருகில் நின்ற போதிலும் நீ தள்ளி இருப்பதாக நினைத்து உன்னை கட்டிப்பிடித்து நிற்க தோன்றுகிறதே ஏன்?




நண்பர்களுடன் சாலையை கடக்கும் போது கைவிசி செல்ல நினைக்கும் நான். நீ அருகில் இருக்கும் நேரம் சாலையை கடக்கும் போது குழந்தை போல உன் கையை பிடித்து நடக்க வேண்டுமென்று போலிருக்கிறதே ஏன்?




நண்பர்கள் என்னை பார்க்கும் போது எதுவும் நடக்காத எனக்கு நீ பார்க்கும் அந்த ஒரு பார்வையில் என் இதயம் வயிறு வரை ஒரு நொடியில் ரோலர்கோஸ்டர் போல இறங்கி ஏறுகிறதே ஏன்?


ஏன்?ஏன்?ஏன்


எனக்கு என்ன ஆச்சுப்பா.....இதை படித்த நீங்கள் கொஞ்சம் சொல்லிவிட்டுதான் போங்களேனப்பா? ப்ளிஸ்




எனக்கு என்ன ஆச்சுன்னு புரியாதவங்க தொடர்ந்து  படிக்கவும்

ஒண்ணுமில்லைங்க பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பொண்ணுக்கு  கடவுள் பக்தி மிக அதிகம். அவ அவளோடைய இதயத்தை கடவுளிடம்  ஒப்படைத்தாள். அந்த கடவுளோ அந்த இதயத்தை ஒரு நல்லவனிடம் கொடுத்தார். அந்த நல்லவன் வேறுயாரும் இல்லைங்க அது நான் தாங்க. அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புதான் நான் மேலே எழுதியது....




ஆமாம் இதெல்லாம் எதுக்குடா எங்ககிட்ட சொல்லுறீங்க  என்று கேட்கிறீர்களா ?அது ஒன்றுமில்லைங்க இப்படியெல்லாம் நினைச்சு நினைச்சு காதலிச்ச  என் காதல் 'காவியம்' ஆகவில்லை காரணம் அது கல்யாணத்தில் முடிந்து விட்டது...


அட  அப்படியா காதலிச்ச பொண்ண கட்டிய முட்டாள் நீ தானா என்று கேட்கிறீர்களா?  அது உண்மைதாங்க ஆனா காதலிச்ச எல்லாப் பொண்ணையும் கட்ட முடியலைன்னு வருத்தம்தான் ஆனால் காதலிச்ச பொண்ணுகளில் இருந்து ஒருத்தியை செலக்ட் பண்ணி கல்யாணம் செய்த ஜென்டில்மேன் நான்தாங்க. அந்த ஜென்டில்மேனின் கல்யாண நாள் ( ஜூன் 10 )இன்றுதான் அதன்  விளைவே இந்த மொக்கை பதிவு

காதல் அல்லது  அரேஞ்டு மேரேஜ் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கலாம் . அது எல்லாம் மறந்து வாழ்வதுதான் வாழ்க்கை, இதுதான் நான் விரும்புவதும் நினைப்பதும்.சில நேரங்களில் நமது துணை நம்மை 'Imperfect' என்ற வார்த்தையை  சொல்லும் போது  என் மனதில் I'm perfect என்று அவள் சொல்வது போலதான் இருக்கிறது.



பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி :அறிவுள்ள ஆண் உங்கள் அறிவை திறப்பான். அழகான ஆண் உங்கள் கண்களை திறப்பான். ஆனால் ஜென்டில்மேன்  உங்கள் இதயத்தை திறப்பான் என் மனைவியின் இதயத்தை நான் திறந்தது போல...


மனைவி எப்ப பாரு லேப்டாப் லேப்டாப்  என்று கத்தியவாறே சப்பாத்தி கட்டையை எடுத்து வராங்க.....அப்ப  நான் வரேங்க வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமுங்க.....


காதலில்காயம் படுவது இயல்பேகாரணம் அதில்நாம் விழுவதுதான்ஆனால்
அதனால் ஏற்படும்வலியும் சுகமாகத்தான் இருக்கிறது

நாம் அடிவாங்குவதற்கு என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது பாருங்க....


டிஸ்கி : இன்று நாங்கள் பார்த்த படம் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் . எனக்கு பிடித்திருந்தது.... சிரிப்பு படங்களுக்கு கூட அழுகும் என் மனைவி இந்த படத்தை பார்த்தும் வழக்கத்தைவிட சிறிது அதிகம் அழுதாள். எனக்கும் சில காட்சிகள் மனதை தொட்டு நெகிழ வைத்தது. என் கண்களில் இருந்து மிக அதிகமல்ல சில சொட்டுகள்மட்டும் கண்ணிர் வந்ததது. அம்புட்டுதாங்க....






அடுத்த பதிவில் சந்திக்கும் வரை எனது கிறுக்கல்களை படித்து ரசியுங்கள்..


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரியமதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக

அன்பு பெருக !


அன்பு பெருக !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரியாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! என்றும் என்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்







எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று அறிவதுடன் நீங்கள்தான் நாளைய வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்…


அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்




எங்கள் அன்பு நிறைந்த‌ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீனுஷாகுட்டி வாழ்க வளமுடன் என்றென்றும்! இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேம். என்றும் .அன்புடன் 

இதயத்தின் கீழ் பகுதி அறைகள்



இதயத்தின் கீழ் பகுதி அறைகள் die Herzkammer (med.)
இடுப்பு அல்லது கீழ் நாரிப் பகுதி die Lende, Hüfte
இணைப்புப் பகுதி das Verbindungsstück
இதயத்தின் பக்கத்தில் இருந்து சுவாசப்பை தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் குருதி die Hauptschlagader (anat.)
உடலின் கீழ்ப் பகுதி der Unterkörper (anat.)
ஒத்த பகுதி, எதிரிணை das Gegenstück
ஒரு பகுதி Auszüge
ஒரு பெயரின் கீழ் பதிவு die Ausgabe (comp.)
கட்டட பகுதி die Baustelle, Bauplatz
கட்டையான வாலும் அடர்த்தியான மயிர்களை காலில் கொண்டிருக்கும் ஒரு வகை துருவப் பகுதி der Lemming (zool.)
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி மக்கள் அணியும் நீண்ட தளர்த்தியான உடை der Kaftan
கீழே, கீழ் benieden, in der Hölle, unten, unter
கீழ் உள்ளங்கி die Unterhose (clo.)
கீழ் வானம், அடிவானம் der Horizont (idiom)
கீழ், கீழே außer, betrieb, drosseln, Flaum (m.)
குறுகிய அழுத்தமுள்ள பகுதி die Verengung
கூட்டுப் பொருட்களின் ஒரு பகுதி Zutaten, Inhaltsstoffe
சாதாரணமாக, வழமையாக, சாதாரண சூழ்நிலையின் கீழ் normalerweise (adv.)
சுற்றுப்புறம், அதைச்சுற்றிய பகுதி, வட்டத்திற்குள்ளான die Nähe, Umgebung
துண்டுபட்ட, துண்டிக்கப்பட்ட உடம்பு பகுதி verstümmelt (adj.)
நடந்து செல்பவர்களின் பகுதி die Fußgängerzone
நான்கில் ஒரு பகுதி, கால் பகுதி vierter Teil
நிலக் கீழ் unterirdisch (adj.)
நிலமட்டத்துக்குக் கீழ் உள்ள, நிலத்துக்குக் கீழே die U-Bahn
பகுதி நேர வேலை die Halbtagsarbeit
பகுதி நேர வேலை die Teilzeitarbeit
பகுதி நேரம் teilzeitlich
பகுதி, குடியேற்ற நாடு die Kolonie, Siedlung
பகுதிகளாகப் பிரித்தல், பிரிவினை, பிரிக்கப்பட்ட ஒரு பகுதி Fach
பூமியின் மத்திய வலயப் பகுதி


மகளிர் மருத்துவர் der Frauenarzt (med.)
அறுவை மருத்துவர், இரண சிகிச்சை der Chirurg (med.)
அவசர செவை மருத்துவர் der Notarzt (med.)
இதய அறுவை மருத்துவர் der Herzchirurg (med.)
இரவுக் கடமை, (மருத்துவர், மருந்துக்கடை) இரவுச் சேவை der Nachtdienst
எலும்பு முறிவு, மற்றும் நோ தொடர்பான மருத்துவர் der Orthopäde (med.)
கண் மருத்துவர் der Ophthalmologe
கதிர்வீச்சு மருத்துவர் Röntgenologe, Röntgenarzt (med.)
குழந்தை மருத்துவர் die Pädiatrie
சிறுநீரக மருத்துவர் die Urologe (med.)
நரம்பியல் மருத்துவர் der Neurologe (med.)
பல் மருத்துவர் der Zahnarzt (occup.)
பிரதம மருத்துவர் der Chefarzt (med.)
மகப் பேற்று மருத்துவர் Genealoge (occup.)
மருத்துவர், வைத்தியர் der Arzt, Doktor


der Wendekreis

தோழிகள்


தோழிகள் 

இதயபூர்வமான வாழ்த்துக்கள் herzliche Grüße
இதயபூர்வமான warmherzig (adj.)
இதயபூர்வமான நல்வாழ்த்துகள்! Herzlichen Glückwunsch!
உங்கள் அன்பளிப்புக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி. Vielen Dank für Ihre Geschenk.
உங்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Gute Wünsche für Ihre Prüfung.
உங்கள் புதிய நிறுவனம் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். Viel Erfolg für ihre neue Firma.
உங்கள் புதிய வணிக முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். Viel Erfolg für Ihre Unternehmung.
உங்கள் புதுவீட்டு குடிபுகுதலுக்கு வாழ்த்துக்கள். Gute Wünsche für Ihren Einzug in die neue Wohnung.
எங்கள் இதயபூர்வமான திருமண வாழ்த்துக்கள். Herzliche Grüße zur Hochzeitsfeier.
எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Herzliche Grüße zum Geburtstag.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள். Mein besten Wünsche für gute Zukunft.
ஜேர்மனியில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள். Viele Grüße aus Deutschland.
தேர்வில் சிறப்பாகத் வெற்றிபெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். Herzlichen Glückwunsch zum bestandenen Examen.
புதிய பதவியில் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். Alles Gute für den neuen Job.
புத்தாண்டு வாழ்த்துக்கள் Frohes Neues Jahr
வாழ்த்துக்கள் der Glückwunsch
வாழ்த்துக்கள்

இதயபூர்வமான வாழ்த்துக்கள் herzliche Grüße
இதயபூர்வமான warmherzig (adj.)
இதயபூர்வமான நல்வாழ்த்துகள்! Herzlichen Glückwunsch!
உங்கள் அன்பளிப்புக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி. Vielen Dank für Ihre Geschenk.
உங்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Gute Wünsche für Ihre Prüfung.
உங்கள் புதிய நிறுவனம் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். Viel Erfolg für ihre neue Firma.
உங்கள் புதிய வணிக முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். Viel Erfolg für Ihre Unternehmung.
உங்கள் புதுவீட்டு குடிபுகுதலுக்கு வாழ்த்துக்கள். Gute Wünsche für Ihren Einzug in die neue Wohnung.
எங்கள் இதயபூர்வமான திருமண வாழ்த்துக்கள். Herzliche Grüße zur Hochzeitsfeier.
எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Herzliche Grüße zum Geburtstag.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள். Mein besten Wünsche für gute Zukunft.
ஜேர்மனியில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள். Viele Grüße aus Deutschland.
தேர்வில் சிறப்பாகத் வெற்றிபெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். Herzlichen Glückwunsch zum bestandenen Examen.
புதிய பதவியில் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள். Alles Gute für den neuen Job.
புத்தாண்டு வாழ்த்துக்கள் Frohes Neues Jahr
வாழ்த்துக்கள் der Glückwunsch
வாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்







நன்மையும், தீமையும் கலந்ததே வாழ்க்கை.


ஆனால் அதைப் பிரித்தறியும் அறிவும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.


நாம் எதையெல்லாம் முக்கியமாக நினைக்கிறோமோ, எதெல்லாம் அதிகமாக எண்ணங்களில் தங்குகிறதோ, எதில் எல்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறோமோ, அதெல்லாம் நம் மனத்திலும், சொல்லிலும், செயலிலும் வியாபித்து நம் வாழ்வில் பிரதானமாகி பலம் பெறுகிறது.


நாம் எதையெல்லாம் முக்கியமாக நினைப்பதில்லையோ, எதையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோமோ, எதை எல்லாம் அதிகம் எண்ணுவதில்லையோ அதெல்லாம் நம் வாழ்வில் மங்கி பலவீனம் அடைகிறது.


இதுவே வாழ்வியல் ரகசியம். இது வரை நம் வாழ்வை நாம் எப்படி தீர்மானித்திருக்கிறோம் என்பது இதை வைத்தே அமைந்தது. இனி வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வோம் என்பதும் இதை வைத்தே தீர்மானிக்கப்படும்.


இந்த வகையில் இந்தப் புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்.




கன்னி போன கைகளையும்
இறுகி போன மார்பையும்
உறுதியான கால்களையும்
அசராத மன உறுதியும்
தீர்கமான பார்வையும்…..
வானம் பொய்த்தாலும்,
பூமி பொய்த்தாலும்
சிந்திய வியர்வை காய்ந்தாலும்
மீண்டும் மீண்டும் தோற்றாலும்
உழைப்பை மட்டுமே நம்பி
உழைப்பை மட்டுமே மூலமாக கொண்டு
உழைத்துக்கொண்டே இருக்கும் அனைத்து
உழைப்பாளிகளுக்கும் எனது
உழைப்பாளர்தின வாழ்த்துக்கள்


தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" உலகத் தமிழ் தொலைக்காட்சிகள் முதன்முதலாகக் கண்ட மாபெரும் தமிழ் மேடை. இது சிறுவர்களிடம் இருக்கும் பேச்சுத் திறனையும், சிந்தனை செய்யக்கூடிய ஆற்றலையும் வெளிக்கொண்டுவரும் ஓர் அரிய நிகழ்ச்சி. இதில் நான் பங்குகொண்டது என்னுள் இருந்த எழுத்துத் திறனையும் எனக்கு அறிமுகப் படுத்தியது. விஜய் தொலைக்காட்சிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றைக்கும் உண்டு!





இந்தப் புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக//


நல்ல செய்தியை சொல்லும் புத்தாண்டு.
வாழ்த்துக்கள்.






திருமண வாழ்த்து


(உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)

அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

எளிமைக்கு வழிவிடுங்கள்!

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

ஐயங்களை அழித்திங்கள்!

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!



 
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்


ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.


ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும்

நிலவன்


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…


எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்
உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து
கண்மணிகள் கதைசொல்லும்!

முத்தான காதல் செய்த
மணமக்கள்  ஓருயிராய்
வாழ்க பல்லாண்டு

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்…

கவிதைக்கும்

உயிருண்டென!


திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

இவர்களின்


நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...



பிறந்த நாள் வாழ்த்து

உன் பிறந்த நாள் அல்லவா கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்


எப்படி சொல்ல என் வாழ்த்தை

சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை

என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு

என்று வேண்டி வாழ்த்துகிறேன்

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று

பிறந்த நாள் வாழ்த்து

பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்

முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!
வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் பரிசாக


வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக....
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...
உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்...
விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்
மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்
மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி
ல் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள
நாளில்
மணமக்கள்
மகிழ்வுடன் வாழ்க!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை



சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே

சத்தியமாய்ப் புதியன


பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே

அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்

இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்

உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம்- நட்புகள்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி

வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்

புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்

வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்

மாந்தர்களும் வாழ்த்துவர்

திருமண வாழ்த்து கவிதை


நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!

by
சக்தி

வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்