ஞாயிறு, 1 ஜூலை, 2012

வாழ்த்துக்கள்.




கன்னி போன கைகளையும்
இறுகி போன மார்பையும்
உறுதியான கால்களையும்
அசராத மன உறுதியும்
தீர்கமான பார்வையும்…..
வானம் பொய்த்தாலும்,
பூமி பொய்த்தாலும்
சிந்திய வியர்வை காய்ந்தாலும்
மீண்டும் மீண்டும் தோற்றாலும்
உழைப்பை மட்டுமே நம்பி
உழைப்பை மட்டுமே மூலமாக கொண்டு
உழைத்துக்கொண்டே இருக்கும் அனைத்து
உழைப்பாளிகளுக்கும் எனது
உழைப்பாளர்தின வாழ்த்துக்கள்


தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" உலகத் தமிழ் தொலைக்காட்சிகள் முதன்முதலாகக் கண்ட மாபெரும் தமிழ் மேடை. இது சிறுவர்களிடம் இருக்கும் பேச்சுத் திறனையும், சிந்தனை செய்யக்கூடிய ஆற்றலையும் வெளிக்கொண்டுவரும் ஓர் அரிய நிகழ்ச்சி. இதில் நான் பங்குகொண்டது என்னுள் இருந்த எழுத்துத் திறனையும் எனக்கு அறிமுகப் படுத்தியது. விஜய் தொலைக்காட்சிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றைக்கும் உண்டு!





இந்தப் புத்தாண்டில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைச் சுருக்கி புத்தாண்டைக் கொண்டு செல்லும் அறிவையும், மன உறுதியையும், பக்குவத்தையும் தந்து எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக//


நல்ல செய்தியை சொல்லும் புத்தாண்டு.
வாழ்த்துக்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக