செவ்வாய், 11 டிசம்பர், 2012

சிறந்த சிந்தனைகள்.........1


இறைவனிடம் நாட்டம்

நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.
ஆண்டவனை அறிந்து கொள்ளாதவரிகளின் மனம் கல்லாயிருக்கும்.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் உலகச் செயல்களில் நாட்டம் கொள்வதில்லை

 மனிதனுக்கு அவசியம்

மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை
ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.

எல்லை

களைத்தவனுக்கு வழி நெடுந்தூரம்.
கண் விழித்திருப்பவனுக்கு இரவு நீளம்.
நல்ல தருமங்களை அறியாத மூடர்கட்குச் சம்சாரத் தொடர் எல்லையற்றது

ஞானி

யாரால் உலகம் பல நன்மைகளை அடைகிறதோ அவனே ஞானி.
தத்துவ ஞானி போல் எழுதலாம், பேசலாம்; நடப்பது அவசியமாகும்.
சுயக்கட்டுப்பாடு உடைய மனிதனே சுதந்திர மனிதன்.

எல்லாமே நல்லாருக்கு அண்ணா , ஆனா இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு ரொம்ப சைவமா இருக்கீங்க . சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறீங்களா என்ன ??

அநியாய செல்வம்


ஒரு கதவின் வழியே அநியாயமாக வரும் செல்வம்
பல ஜன்னல்கள் வழியே வெளியே சென்றுவிடும்.

மரியாதை

குழந்தைக்கும் முதியவருக்கும் கொடுக்கும் மரியாதை
- கடவுளுக்கு அளித்த மரியாதையாகும்.

மனிதனை அறியும் வழி

ஒருவனுடைய அறிவை-
அவன் செய்யும் செயல்களால் அறிய வேண்டும், பேச்சினால் அல்ல.
தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய மூன்றும்-
மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும்.
கருணை உடையவர்க்குத் துன்ப உலகு(நரகம்) இல்லையாம்.

தருமம்
இறப்பு நம்மை நெருங்கும் முன்பே நல்ல அறச்செயல்களைச் செய்து விட வேண்டும்.
நல்ல தருமங்களைச் செய்யாதவனுடைய செல்வம் தானே அழிந்துவிடும்.

வாழ்வு நீதி

பொய்ம்மை இல்லாதவர்களுக்குத் தேவர் உலகில் நிலையான இடம் உண்டு.
தீயசெயல்களைச் செய்பவனிடத்தில் வறுமை வந்து சேரும்.
மற்றவரைப் பற்றிப் புறங்கூறுபவரை உலகத்தார் பழிப்பர்.
உயர்ந்தவர்களுடன் நட்புக் கொண்டால் நீ உயர்ந்தவன் ஆவாய்

பொறாமை

பொறாமையைவிட கேடு விளைவிப்பது வேறொன்றும் இல்லை. பிறர் பொருளை விரும்பாதவனிடம் செல்வம் குவியும்.

தவம்

பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருப்பதே தவம்.
நல்ல வழியில் வந்த செல்வம் தான் சந்ததிகட்குப் பயன்படும்

அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.

மறத்தல்

பிறர் நமக்குச் செய்தத் தீமையை மறத்தல் வேண்டும்.
பிறர் நமக்குச் செய்த நன்மையை மறத்தல் கூடாது
வாழ்க்கை தத்துவம்

ஆசைகள் குறையும் பொழுது அமைதி பெருகுகிறது.
உயர்ந்தோர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அன்பான வரவேற்பு பாதி விருந்திற்க்குச் சமம்.

சூழல்

ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியருக்குச் சமம்.
பொய் நம்மைப் பாவிகளாக மற்றிவிடும்.
உண்மை உயவையும் இன்பத்தையும் அளிக்கும்.

செய்ய வேண்டியவை

சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.

இருக்காது

பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !

பிறவியும் வழிபாடும்

இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !

மனமும் மனிதமும்

பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !

கொடுக்காது
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !

வராததும் பெறுவதும்

மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.

எண்ணங்கள் பலவிதம்

ஒரு ஆசிரியர் அடுத்த தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.

மனிதனும் மனமும்

நல்ல சூழ்நிலையில் வாழும் மனிதன் நல்ல மனதைப் பெறுகிறான்.
சோம்பல் உள்ளவனுக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிமையாகத் தோன்றும்.

ஈகை

கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!

ஈகை

கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!

துன்பம்
மற்றவர்களுடைய துன்பங்களை உணராதவன் மிருகமே.
பட்டத் துன்பத்தை மறந்துவிடலாம், அதனால் பெற்ற பாடத்தை மறக்கவே கூடாது.

பக்தியும் அறிவும்

அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.

தெய்வபக்தி
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.

ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.


வாழ்க்கைக்கு மூன்று
சான்றோர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நன்னைச் சான்றோராக்கும்!
ஒழுக்கத்தால் நம்முடைய ஆன்மா நலம் பெறுகிறது!
தொண்டும் ஒழுக்கமும் இன்பத்தை அளிப்பவை!

கவலையும் கட்டுப்பாடு
கவலை மனிதனைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
அளவிற்கு மிஞ்சிய கட்டுப்பாடு கள்ளத்தனத்திற்கு வழி வகுத்துவிடும்.


நாம்
நாம், ஒவ்வொருவரும் தன்னை சீர்திருத்திக் கொண்டால் உலகம் திருந்திவிடும்.
நம்முகத்திற்கு அழகைத் தருபவை நம்முடைய நல்ல எண்ணங்களும், செயல்களுமே ஆகும்.

 அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.

நல்ல நண்பர்கள்
நல்ல நண்பர்கள் துயரத்தை எளிதாக்குவார்கள்.
தன்னலம் அறிவுக்கண்ணைக் குருடாக்கிவிடும். 

தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு உலகம் இன்பமயமாய்த் தெரியும்,
உழைப்பு இல்லையானால் வாழ்வில் செழிப்பும் இல்லையாகும்.

பிறருக்கு நன்மை செய்
பிறருக்கு நன்மை செய்து இன்பமடைய கற்றுக்கொள் நம்முடைய செயல்களால் நமக்குப் புகழ் தானே வரும். நல்ல செயல்கள் வட்டியுடன் நம்மிடமே திரும்பி வரும்.

அன்பை விதை
அன்பை விதைத்தால் இன்பத்தை அறுவடை செய்யலாம், ஆணவத்தை விதைத்தால் துன்பத்தைத் தான் அறுவடை செய்ய வேண்டும்.

 நமது உயர்வு
உலக நாகரீகங்களை ஒப்பாய்வு செய்த சர். ஜான் மார்ஷல் கூறியுள்ளது:
உலகில் முதலில் தோன்றிய நாடு தமிழ்நாடு, முதலில் தோன்றிய மனிதன் தமிழன். முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி.


மனமும் கடவுளும்
கலங்கிய நீரில் சூரிய பிம்பத்தைத் தெளிவாகக் காணமுடியாது. அதுபோல, நான், எனது எனும் அகந்தையால் கலங்கியிருக்கும் மனதில் கடவுளைக் காணவே முடியாது.

உள்ளம் உருகுவதும் கள்ளம் நீங்குவதும்

உலோகம் உருக உருக அதில் உள்ள அழுக்கு நீங்கும் !
வெண்ணை உருக உருக வாசனை பெருகும் !
ஆடையைத் துவக்கத் துவைக்க வெண்மை வெளிப்படும் !
நம் மனமும் இறைவனை நினைத்து உருகுமானால்; நான், எனது எனும் மாசுக்கள் நீங்கும். மாசற்ற மனமே ஈசனின் கோயில்.

மனம்
மனம் ஒரு நல்ல சேவகன், ஆனால் கெட்ட முதலாளி. மனதை உனக்கு அடிமையாக்கினால், அது உனக்குச் சேவகனாக இருந்து வேலை செய்யும்; மனதிற்க்கு நீ அடிமையானால், அது உன்னை ஆட்டிப் படைக்கும். மனம் போல நம் வாழ்வு அமையும்.

வேற்றி அடைய ஐந்து வழிகள்
1. சான்றோர்களுடன் மட்டுமே நட்பு கொள்.
2. நேரத்தை நல்ல வகையில் பயன்படுத்து.
3. குறிக்கோளை (இலட்சியம்) அடைய கடினமாகப் பாடுபடு.
4. உன்னை எப்பொழுதும் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே.
5. எதிர்ப்புகளைக் கண்டு கலங்காதே.

வழிபாட்டுச் சிந்தனை
இறைவழிபட்டின் போது சிந்திக்க வேண்டிய மூன்று உண்மைகள்:
1. எல்லாத் திசைகளிலிருந்தும் தூய்மையான எண்ணங்கள் என் மனதை வந்தடையட்டும்.
2. எல்லா உயிர்களும் இன்பமாய் வாழட்டும்.
3. உலகின் பகைமை ஒழிந்து அன்பும் இன்பமும் விளங்கட்டும். 


முளையும் இறைவனது திருநாமமும்

விதையிலிருந்து வெளிவரும் ‘முளை’ மிக மெல்லியது. ஆனால், கடினமான பூமியைத் துளைக்கும் ஆற்றல் அதற்குண்டு. இதைப் போலத்தான் இறைவனுடைய திருநாமமும் (சிவாயநம) அளவிலா ஆற்றல் கொண்டது.

குருவின் அவசியம்
கட்டையுடன் கட்டையை உரசினால் நெருப்பு (ஒளி) வெளியே வருகின்றது. நம் உள்ளே இருக்கும் ஆன்ம ஒளியை, வேறு ஒரு மனித வடிவம் தாங்கி வந்துள்ள குருவால் தான் வெளிக் கொணர முடியும்.

வாழும் விதம்
தினமும் பிறருக்கு நம்மாலான ஒரு சிறிய உதவியைப் பலன் கருதாமல் செய்து வந்தால், வழ்க்கை அர்த்தமுள்ளதாக விளங்கும்.


வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......


அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
 
கொடுப்பது
கொடுப்பது தெய்வகுணம். இரவு பகல் என்று பாராமல் கொடுங்கள். கொடுப்பதால் உயிர் வீடு பேறடைகின்றது. நீஙகள் பிறருக்குக் கொடுக்கும் பொழுது, இறைவன் உங்களுக்குத் தவறாமல் கொடுக்கிறார். 

ஆணவமும் நாமும்
ஆணவம், இருள்மயமானது. இருளை போக்க ஞானப் பேரொளியாகிய இறையருள் வேண்டும். ஒளிவந்தால் இருள் தானே விலகுவது போல, இறையருள் ஆன்மாவில் பதிந்தால் ஆணவம் தானே கெடும். 

துன்பங்கள் நீங்கும் வழி
குழந்தை தன் தாயையே முழுவதும் சார்ந்திருப்பது போல நாமும் நமது வழிபாடும் கடவுளைச் சார்த்திருக்க வேண்டும். கடவுள் நாட்டம் உண்டாகும் பொழுது துன்பங்கள் தாமே விலகும்.

நீங்களும் ஞானிகளாகலாம்
தயவே (கருணையே) வடிவாக வாழுங்கள் !
எல்லா உயிர்களிடத்தும் இறைமையைக் காணுங்கள் !
நாம் ஆண்டவனின் கருவிகள் என்பதை மறவாதீர்கள் !
உங்களால் உலகம் நன்மை அடையட்டும் !

பக்தியின் நோக்கம்
நல்ல குணங்களைப் பெருவது தான் பக்தியின் குறிக்கோள். நம்மிடம் உள்ள தீய குணங்கள் விலக விலக உண்மைப் பொருளான இறைவனை நெருங்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.


 ஞானிகளும் நாமும்
இந்த உலகைப் பயன்படுத்தி நாம் மேலும் வினைகளைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால், ஞானிகள், இவ்வுலகைப் பயன்படுத்தி வினைகளைப் போக்கிக் கொள்கிறார்கள்.

பொறாமை
மரப்பொந்திலிருக்கும் சிறிய நெருப்புப் பொறியே யாயினும் அம்மரத்தை முழுவதுமாக வேருடன் அழித்துவிடும். அதைப் போலவே, பொறாமையும் மனிதனை அழித்து விடும்.

நாம் உயர்வடைய வழி


நம்முடைய சிந்தனையிலிருந்து முற்றிலுமாகத் தோல்வி மனப்பான்மையைத் தவிர்த்துவிட வேண்டும். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உடையவராய் வாழ வேண்டும். நாம் உயர்வடைவது உறுதி.

கற்பதன் நோக்கம்

கற்பதும் கேட்பதும் மனம் அடங்குவதற்கே. மனம் அடங்கினால் சினம் அடங்கும். சினம் அடங்கினால் சிவம் விளங்கும். எனவே, கற்பதன் நோக்கம் கடவுளை அடைவதே ஆகும்.


நிந்திக்கின்றவர்களையும் வந்தியுங்கள்

காரணமில்லாமல் (போறாமையினால்) ஒருவர் நம்மை நிந்தித்தால், நாம் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவரைச் சென்று சேரும். அத்துடன் அவர் செய்த புண்ணியத்தில் ஒரு பகுதி நம்மை வந்தடையும். எனவே நம்மை நிந்திக்கின்றவர் களையும் நாம் வந்திக்க (வணங்க) வேண்டும்.

பயனற்ற செயல்கள்
௧. கடலில் பெய்த மழை.
௨. பசியில்லத்வனுக்கு அளித்த உணவு.
௩. சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு.
௪. நன்றி கெட்டவனுக்கு செய்த உதவி.
௫. பணக்காரனுக்கு அளித்த தானம்.

  குருவின் மேன்மை
குருவாக விளங்குவதற்கு எத்தனையோ பிறவிகளில் அவர் இறைவரை வழிபட்ட புண்ணியம் உடையவர், நம் உய்யும் பொருட்டு சிவபெருமானால் பூவுலகிற்க்கு அனுப்பப்பட்டவர்.

 உலக வாழ்வு
நம்முடைய அறியாமையை நீக்கி, நல்ல பண்பாளர்களாக வழ்வதற்கு இவ்வுல்க வாழ்வு அமைந்துள்ளது. நாம் பயன்படுத்தும் விதத்தும் விதத்தில் வாழ்வு அமைகின்றது.

மூல நோய் தீர்த்தல்
பப்பாளிப் பழத்தைத் தேனுடன் உட்கொண்ட்டால் மூல நோய் குணமாகும்.
தமிழ் பாடல் களை (திருமுறைப் பாடல்களை) இசையுடன் பாடினால் (பிறப்பு இறப்பாகிய) மூலநோய் குணமாகும்.

பக்தியை அளக்கும் வழி
ஒருவனிடம் எந்த அள்விற்க்கு சுயநலம் குறைந்து பொதுநலம் வளர்ந்து காணப்படுகிறதோ, அந்த அளவிற்க்கு அவன் பக்தியில் உயர்ந்துள்ளான் என்று அறியலாம்.

தெய்வ குணம்
மனிதனிடம் உள்ள தீய குணங்கள் எல்லாவற்றையும் விட மிகவும் கொடிய குணம் உலோபம் (கருமித்தனம்). கொடுப்பது தான் தெய்வ குணம்.
கொடுக்கும் குணம் மற்ற எல்லாத் தீய குணங்களையும் மறைத்துவிடும், செல்வமும் புகழும் கொடுப்பவனைத் தேடி வரும்.


நமக்கு உயர்வைத் தரும் ஐந்து
1. சிவபெருமானின் திருவடிக் கமலங்கள்.
2. அவர் திருப்பாதங்களைப் பூசிக்க நீர்.
3. அப்பெருமானை (அர்ச்சிப்பதற்கு) வாழ்த்தி வணங்குவதற்குத் தமிழ் வேதப்பாடல்களும் வாசனையுள்ள மலர்களும்.
4. சிந்திப்பதற்குத் திரு ஐந்தெழுத்து (சிவாயநம).
5. அணிந்து மகிழ திருவெண்ணீறு.


சிவலிங்க தரிசனம்
காலையில் தரிசனம் செய்தால் நோய்கள் குணமாகும்.
நண்பகல் தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்.
சாயங்கால தரிசனம் செய்தால் பாபங்கள் போகும்.
இரவு (அர்த்தயாமம்) 9 மணி தரிசனம் முக்தி அளிக்கும்.

வாழ்க்கை சிந்தனைகள்
ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாகத்தை தீர்க்காத தண்ணீர்
ததித்திரம் அறியாத பெண்கள்
கோபத்தை அடக்காத ஆண்கள்
குரு சொல் கேளாத சீடன்
குளிப்பதற்கு உதவாத தடாகம்
இவையாவும் இருந்தும் பயனில்லை ..........

நல்ல பயனுள்ள வாழ்க்கை சிந்தனைகள்...
நன்றி பூவன்...தொடரட்டும் உங்கள் சேவை...

நானும் இது படித்து பயன் அடைகிறேன்..

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் கூறும் அறிவுரை:
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பதை உறுதியாக நம்புங்கள் என்கிறார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தர். உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப்படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ்சென ஒதுக்கித் தள்ளுங்கள்.

போதுமான அளவுக்கு நீங்கள் கண்ணீர்விட்டு அழுதுவிட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விழித்தெழுந்து, செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எழுமின், விழிமின், செயல் முடியும்வரை உழை மின் என்று உரத்த குரலில் நமக்கு அவர் உணர்த்துகிறார்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.



ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது

அய்யா நீங்களுமா ...

காலை கதிரவன்
பனித்துளி மேல் காதல்
கதிரவனின் ஓலை
வரும் வரை உறங்கி கிடக்கும்
புல்லுகோ பனியின் மீது காதல் ....
புல்லில் தொடங்கி
பூலோகம் எல்லாம் காதல்
பூ பூவாய் பூவையர் மனதிலும்
காதலும் .........

அனைத்திலும் காதல்
அனைத்திற்கும் காதல்
ஆனால் காதலால் அவை
என்றுமே அழுவதில்லை
காதலும் அழிவதில்லை

காலையிலே காதல் போர் தொடரனுமா ??

அழியா காதல்
தினம் தினம்
விழிகளில் கண்ணீருடன்
வழிகின்றது ,வலிக்கின்றது ....


 பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.


லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.


அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.


காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை

                                1  ஈகரை தமிழ் களஞ்சியம்   thanks



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக