சனி, 30 ஜூன், 2012

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.

  • 'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.
  • குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.
மேலும் அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவை ஒரு புதுமணத் தம்பதியினருக்கான அணிகலன்களும் , பெரியவர்களால் திருமணநிகழ்வில் சொல்லப்படுகின்ற இனிய  வாழ்த்துக்கழும் ஆகும் . கூடியவரையில் ஜீவா பிரியா தம்பதிகளை வாழ்த்துகின்ற வேளையில் , அவர்களும் , வாசகர்களும் பயன் பெறும் வகையிலான நல்ல சிந்தனைகளைத் தூண்டத்தக்க வகையில் வாழ்த்துகளை உள்ளடக்கி இந்தப் பதிவு அமையுமாயின் மிகவும் நல்லது எனத் தாழ்மையாக வேண்டுகின்றேன் . கிளியவனுக்கும் மிக்க நன்றிகள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக