செவ்வாய், 16 அக்டோபர், 2012

கல்வித்துறை அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


ராமநாதபுரம், அக். 16-

ராமநாதபுரத்தில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் கூறியதாவது:-

எங்களின் ஆசிரியர் கூட்டணி அமைப்பு 7 அம்ச கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளது. அதாவது மத்திய அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஊதியக்குழுவின் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துசெய்து வேலை வாய்ப்பகம் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும்.

கல்வித்துறை அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலத் தலைவர் காமராஜ், மாநில பொருளாளர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தென் மண்டல அமைப்பாளர் மருது ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பின்பு நடந்த கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக