ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்
இன்நன்னாளில்
அனைவருக்கும் என் இனிய பெருநாள்
நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும்
இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
சிக்கன் பிரைட் ரைஸ்
செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்
கிரில்ட் சிக்கன்
சிக்கன் லாலிபாப்
சில்லி பிரான்
மட்டன் ரோல்
தந்தூரி சிக்கன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
சிக்கன் பிரைட் ரைஸ்
செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்
கிரில்ட் சிக்கன்
சிக்கன் லாலிபாப்
சில்லி பிரான்
மட்டன் ரோல்
தந்தூரி சிக்கன்.
Tweet | |||||
November 4, 2010
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என்
இதயம் கனிந்த இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள்!
Tweet | |||||
September 9, 2010
ஈத் முபாரக்!
அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத்திருநாள்
வாழ்த்துக்கள்!
அழகுற வளர்த்திட்டு
அன்பையும் பண்பையும்
பாங்குற கற்பித்த அன்னையரே
ஈத் முபாரக்!
குடும்பம் செழித்திட
மெழுகாய் பனியாய்
உருகி உழைத்த தந்தையரே
ஈத் முபாரக்!
குலம் செழிக்க வளம் பெருக்க
வந்துதித்த கண்மணிகாள் என்றென்றும்
வளத்துடனும் நலத்துடனும்
வாழ்வாங்கு வாழ்க!
செல்வங்களே உங்களுக்கு என்னினிய
ஈத் முபாரக்!
தம்பிக்கு கொடுங்க
எனக்கு போதுமென
தள்ளி நின்று பூரித்து நிற்கும்
அண்ணன்மாரே
ஈத் முபாரக்!
கண்கள் கலங்கி
தவித்த வேளை
பரிவுடன் முந்தானைகொண்டு
துடைத்துவிட்ட அக்காமாரே
ஈத் முபாரக்!
அவளுக்கு மட்டும்
அதிகம் எதுக்கு
அதையும் எனக்கே எப்பவும் கொடுங்க
அடம் பிடிக்கும் தங்கையரே
ஈத் முபாரக்!
தக்பீர் முழங்கும்
சப்தத்துடனே
சங்கையாய் வந்து இன்முகத்துடன்
வாழ்த்து சொல்லும் மாமாமாரே
ஈத் முபாரக்!
பாசத்துடனே பரிவு காட்டி
கதை பல சொல்லி
பாங்குற ஊட்டி உணவை அளித்த பாட்டிமாரே
ஈத் முபாரக்!
எம் கூச்சல் கேட்டு எரிச்சலை விட்டு
ஏசாதிருந்து ஏற்புடன் நடந்து
ஏற்றம் புரிய
துணை நின்ற தாத்தாமாரே
ஈத் முபாரக்!
கல்விக்கண் திறக்க
பாங்காய் கற்பித்து
படிப்பைத்தந்த ஆசிரியரே
ஈத் முபாரக்!
வாழ்விலும்,தாழ்விலும்
ஒன்றுபோல் தோள் தந்து
உதவிட்ட தோழர்களே
ஈத் முபாரக்!
பொழுதை போக்குவதற்கு
கணினி முன்னமர்ந்து
கிறுக்கியதை அருமையென
சிலாகித்து உவந்து
தவறாது தட்டிக்கொடுத்து
ஓட்டளித்து பின்னூட்டும்
வலையுலக நட்புக்களே
உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த
ஈத் முபாரக்!
Tweet | |||||
April 14, 2010
சித்திரைதிருநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிப்புடன்
கொண்டாடுங்கள்
இனிய வார்த்தை
பேசுங்கள்
இன் முகம்
காட்டுங்கள்.
இழி சொற்களை
அகற்றுங்கள்
இதிகாசம்
கேளுங்கள்
இன்ப வாழ்க்கை
வாழுங்கள்
இறைவனை
வணங்குங்கள்
இறையச்சம்
நிலைக்கட்டும்
இதை விடவும்
மேலான
இன்வாழ்வு
அங்குண்டு
இதுதனை மறவாமல்
இடறின்றி
வாழுங்கள்
இகமெல்லாம்
இன்புறவே
இன்பமாக
வாழுங்கள்
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக