செவ்வாய், 6 டிசம்பர், 2011

12.06.2011 1/1 இதைத் தான் உலகம் காதல் என்கிறதா



 
உன்னுடனான என் நிகழ்வுகளை
மட்டும் மனதின் ஓர்
மூளையில் சேகரிக்க நினைக்கிறேன்
முடியவில்லை

மனதின் முக்கியமான குறியீடுகளில்
உன் நிகழ்வுகளின் குறிப்புகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருந்தாலும்...
மனதில்
ஆழமாகவே நிலைத்திருக்கிறது
அதற்கான தலைப்பைத் தேடித்
தான் மனம் அடிக்கடி சோர்கிறது
காதலென்றோ? நட்பென்றோ?
இரண்டில் ஒன்றை மட்டும்
வைக்க என் மனம் விரும்பவில்லை
உடலியல் ஈர்ப்பைத் தாண்டி
உனக்கும் எனக்குமான
அன்பின் தேடல்கள்
மிக நீண்டது
இருப்பினும் உன் உருவத்தை
தாண்டிய அந்த அன்பின் தேடலை
நான் யாரிடமும் பெற இயலாது
என்றெண்ணும் பொழுது தான்
என்னவனே! இலக்கியங்கள்
சொல்வது போல்
இது ஒரு நோயா?
இதைத் தான் உலகம்
காதல் என்கிறதா…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக