செவ்வாய், 6 டிசம்பர், 2011

பிடிக்கவில்லை


பிடிக்கவில்லை
என் அம்மாவின் அன்பு பிடிக்கும்
அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கும்
அண்ணாக்களின் அரவணைப்பு பிடிக்கும்
கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்

மல்லிகையின் நறுமணம் பிடிக்கும்
நண்பியின் குறுநகையும் பிடிக்கும்
வெண்ணிலவின் ஒளியதுவும் பிடிக்கும்
வெட்டவெளியில் தனியாக நடக்க பிடிக்கும்

மெல்லென தூறும் மழை பிடிக்கும்
சில்லென வீசும் தென்றலும் பிடிக்கும்
செல்லமாக வளர்க்கும் கிளியும் பிடிக்கும்
சோகமான பாடல்கள் பிடிக்கும்

சொந்தக் குரலதுவும் பிடிக்கும்
மழலைகளின் மொழியும் பிடிக்கும்
கலைகள் சிலைகளும் பிடிக்கும்
சின்னதாக சிரிக்க பிடிக்கும்

வண்னத்துப்பூச்சி பிடிக்கும்
நண்பனின் அறிவுரை பிடிக்கும்
மரங்களின் அசைவும் பிடிக்கும்
கடல் அலையதுகூட பிடிக்கும்
மென்மையாக பேசவும் பிடிக்கும்
இன்னும் எத்தனையோ பிடித்த எனக்கு
என்னையே சுற்றி சுற்றி வரும்
உன்னை ஏன் பிடிக்கவில்லை..?

என்னைச் சுற்றும் பருந்தே
பேதை எனை சிலநாள்
தேடி வராமல் இரு...
பிடிக்கும் என்றறிந்தால்
நாடி உனை நான் வருவேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக