செவ்வாய், 6 டிசம்பர், 2011

பெற்றோர்கள் புலம்பல்...


பெற்றோர்கள் புலம்பல்...





வருடங்கள்
பதினாறு 
அடைக்காத்து 
பாசத்தை 
நேசத்தை 
கொட்டி 
கேட்டதை எல்லாம் 
வாங்கி கொடுத்து 
படிக்க பள்ளிக்கு 
அனுப்பினால்  

பருவம் வரவே  
பாடம் பாதை மாற 
காதல் 
புதுப் பாடம்
கற்றுத்தர 
நேற்று 
சந்தித்தவனை 
நம்பி 
நம்பி இருந்த 
எங்களை 
இன்று
சந்தி சிரிக்க வைத்து 
ஓடி விட்டாள்...
 
You might also like:

    SATURDAY, DECEMBER 03, 2011

    விலைவாசி...




    ஏழைகள் 
    பயன் படுத்தும் 
    குளத்தில் 
    பாசி பிடித்த 
    நிலையில்...


    ஏழைகளை 
    வாழவிடாமல் 
    முடக்கிவிட 

    யாரோ  விட்ட 
    சாபமாய்...


    முன்னேறவே 
    வேண்டாம் 
    வளரவே 
    கூடாது என்று 
    கங்கணம் 


    வானமும் 
    பொய்ப்பிக்க 
    வாக்கும் 
    நிறமாறி 
    காற்றில் 
    கற்பூரமாய் 
    கரைந்து
    போகவே 


    வருடா வருடம்
    செய்வினையாய்
    விலைவாசி

    வழமையாய் 
    உயர்ந்து 
    சிரித்தது 
    பயமுறுத்தும் 
    சட்டமாய்...
     
    You might also like:

      THURSDAY, DECEMBER 01, 2011

      பெற்ற பாவத்திற்கு...


      மனதுக்குள் தீயை
      எறியும் நிலையிலும்
      அந்த வீட்டில் மட்டும்
      மயான அமைதி...


      பார்த்து பரவசம்
      பத்து நாள் பழக்கம்
      பத்து மாதத்துக்கு
      தந்து மகிந்தது துக்கம்


      வெறு வாய்க்கள்
      அவுலை மெல்லுவது
      போல அவளை பற்றி
      தெருவே ஒன்று
      கூடி அசைப்போட்டது


      ஓடி போய்விட்டாள்
      ஓடுகாலி என்றும்
      பிள்ளைகளை வளர்க்க
      தெரியவில்லை
      என்று வசை முரசு
      முழங்கிய வண்ணம்...


      இதை எல்லாம் கேட்டு
      இருக்கவும் முடியாமல்
      இறக்கவும் முடியாமல்
      நம்பிக்கை தோல்வியில்
      நடைபிணமாய்
      பெற்ற பாவத்திற்கு
      பெற்றோர்கள்...
       
      You might also like:

        WEDNESDAY, NOVEMBER 30, 2011

        முதியோர் இல்லத்தில்...


        அப்பாவின் 
        இறப்புக்கு பின் 
        விதவையின் 
        விலாசத்தை 
        மாற்றாமல் 
        எனக்காக 
        வாழ்ந்தவள்.


        உன் அன்புக்கு 
        அடிபணிந்தே 
        ஒப்புக்கொண்டேன் 
        பார்க்காமலே 
        என் இல்வாழ்கையை.


        நம் நம்பிக்கை 
        மாறி தான் போனது.


        என் முன் நீயும்,
        உன் முன் நானும் 
        அவமானம் படாமல் 
        நாம் வாழ 


        ஒப்புக்கொண்டாய் 
        முதியோர் இல்லத்தில் 
        நீ வாழ...



        சொல்லமுடியா 
        சூழ்நிலையில் 

        திருத்த முடியா 
        நிலையில் 
        நான்
        இருப்பதால் 




        எனக்கு மட்டும் தான்
        தெரியும் 
        என்  
        பாசத்தை காட்ட 
        உன் பாசத்தோடு 
        நான் வாழ
        சூழ்ச்சி செய்தது...


        இன்றும் நான்
        உன் மகனாய்
        அலுவலக 
        மதிய இடைவெளியில் 
        நீ ஊட்டி விடும் 
        சாதத்தில் மகிழ்கிறேன்...
         
        You might also like:

          TUESDAY, NOVEMBER 29, 2011

          குமரி கிழவியாய் ஆகி...

          சிறைக்குள் 
          சில நாட்கள் 
          பிணையத்தில் 
          வெளியேவும் 
          வாய்தாக்களும் 
          வாங்கப்பட்டு 
          நடத்தப்பட்டன...

          காலங்கள் 
          வருடமாய் மாறி 
          குமரி 
          கிழவியாய் 
          ஆகி...

          ஆராய்ந்து பார்த்ததில் 
          போதிய ஆதரமில்லாமல் 
          போகவே 
          இவர் குற்றமற்றவர் 
          என்று கருதி 
          இந்த  மனு
          தள்ளுபடி
          செய்யப்படுகிறது.

          சட்டம் தன்
          கடமைக்கு உட்பட்டு 
          எழுதுகோல் 
          முறிக்கப்பட்ட 
          நிலையில்
          முடித்துக்கொண்டது...
           
          You might also like:

            MONDAY, NOVEMBER 28, 2011

            இனி ஒரு பிறவி ?


            மனிதனாக பிறந்து
            மரத்தை அழித்து
            மழையை இழந்து,
            உலகத்தை 
            மாசுபடுத்தும்
            நிலையில்...

            நானும்
            இருப்பதைக் கண்டு,
            வெட்கப்படுகிறேன்
            தடுக்க நிலை அறியாமல்.
            வேண்டுமா 
            இனி ஒரு பிறவி 
            என்ற கேள்விக்குறி...

            தீவிரவாதத்தில்
            தீவிர வாதத்தில்,
            இணைந்து ,இணைத்து 
            மனிதனே
            மனிதனை  கொல்லும்
            நிலை அறிந்தும்...

            தடுக்க நிலை அறியாமல்
            வேதனையில் நான்
            மீண்டும் எனக்கு
            வேண்டுமா 
            இனி ஒரு பிறவி ?

            மதம்,சாதி, என்றும்
            மொழி வெறி கொண்டும்,
            அலைகின்ற 
            மனித மிருகத்தோடு
            வேதனையோடு
            விரக்தியோடு
            வாழும் வகையில்
            தடுக்க நிலை 
            அறியாத நிலையில்
            வேண்டுமா 
            இனி ஒரு பிறவி 

            துறவு தன்னை 
            இழந்தநிலையில் 
            துகிலுரிக்கும் 
            ஆசாமி
            நிலை அறிந்தும்...

            பகல் வேடம் போடும் 
            அரசியல்வாதிகளை
            அறிந்தும்,புரிந்தும் 
            வாய் திறக்க 
            முடியவில்லை 
            தடுக்க வழியில்லை 

            தவறு என்று தெரிந்தும்
            தேவைக்கு லஞ்சம் 
            தரும் நிலையில்...

            கட்டாயத்தோடு
            நானுமிருந்தும்
            தவறாய் போகும்
            உலகம் கண்டு

            கண்டும் ,காணமல்
            ஒதுங்கும் நிலையை 
            பார்த்து  கேட்கிறது மனம் 

            ஒரு கேள்வி
            வேண்டுமா 
            இனி ஒரு பிறவி ?
             
            You might also like:

              SUNDAY, NOVEMBER 27, 2011

              ஈழத்தில் சுவாசிக்கும்.


              ஈழம்!
              இறந்தவர்களின் கனவு
              இரத்தத்தை சிந்தி 
              உறவுகளின்
              உயிர்களை
              இழந்தவர்களின்,
              உணர்வு...

              தோல்வியே 
              கருவாகி
              களம் காண 
              வழியானது
              இனத்தைக் 
              காக்கும்
              கவசமானது.

              வரும் சுதந்திரம்
              கிடைக்கும் அதிகாரம்
              என்ற எண்ணத்தில் 
              மண்ணுக்குள்
              புதைந்த விதைகள்
              மரமாகி பூக்கும் 
              ஈழம் மலரும்

              நகைக்கும் கூட்டமே
              வரலாறு பாருங்கள்!
              சுதந்திரப் போராட்டம்
              எல்லாம் உடனே 
              கிடைக்கவில்லை
              கிடைத்ததில்லை!

              ஆதிக்கவெறியர்கள்
              அழிந்தததை 
              இந்திய
              வரலாறு சொல்லும்,
              1947 ஆண்டை பார்த்தால்
              விடை தெரியும்
              உண்மை சொல்லும்
              நம்பிக்கைக்கொள்ளும்...

              நம்பிக்கையே வாழ்க்கை.
              நாளை மலரும் 
              ஈழம் என்பதை,
              நாளும் எண்ணும் 
              மனதை
              மறக்கமாட்டோம்

              ஈழத்தில் சுதந்திர
              தமிழ்க் காற்றில் 
              எங்கள் சுவாசம்
              சுவாசிக்காமல் 
              விடமாட்டோம்!

              உறுதியான உயில்
              உயிராகி
              உரமாகி போனது.
              உயிர் போனாலும் ...

              உறவுக்கு
              ஈழம் கிடைக்கும்
              கிடைக்க 
              புதுத்  தலைமை பிறக்கும்!

              வலிகள் போக்க,
              விடியலாய் வழிகள்
              கிடைக்கும் 
              எங்கள் இல்லங்கள் 
              முளைக்க
              ஈழத்தில் சுவாசிக்கும்.
               
              You might also like:

                வாழ்கையை தேடி...

                வாலிபத்தில் 
                வறுமை
                இணைந்துக்கொள்ள 
                வாலிபத்தை 
                விற்றதை 
                அறியாமல் 


                கனவுகளோடு 
                எதிர்பார்த்த 
                வாழ்க்கையை 
                வாழ்ந்து பார்க்க 



                களமும் 
                காலமும் 
                கடல் கடந்து 
                போகச் சொல்லவே

                உள்ளத்தில் 
                ஆசைகளை 
                பூட்டிவிட்டு 
                பயணம் வந்தவர்கள் 
                கோடி..

                வாழக்கையை 
                வாழமுடியாமலும்,
                கைப் பிடித்தவளை 
                மறக்க முடியாமலும்


                சடலமாய் 
                சகலமும் 
                இழந்து 

                இரவுகள் 
                இன்னல்களாய் இருக்க
                இமைகளும்
                மூட மறுக்க 

                இரவோ தூக்கத்தை 
                துக்கமாய் தந்து போகும்.
                முப்பது நாள் 
                விடுமுறைக்கு 

                முந்நூறு

                நாட்களுடன் 
                போராட்டம்.


                கனவுக்குள் 
                அடைக்கப்பட்ட 
                வாழ்கையாய்
                வாழும் 
                மனிதர்கள் கோடி...


                வாலிபத்தை 
                தொலைத்த 
                இதயங்கள் இங்கே...



                வாழ்கையை தேடி
                காரணங்கள் 
                சொல்லி இன்றும்...
                 
                You might also like:

                  SATURDAY, NOVEMBER 26, 2011

                  இருக்காது சரிசமம்...


                  பேருந்துகளிலும்
                  புகைவண்டியிலும்
                  ஒன்றாய் பயணிக்க...

                  மருத்துவமனையில்
                  ஒன்றாய் மருத்துவம்
                  பார்க்க..

                  ரத்தம் தானத்துக்கும்
                  உடல் கூறு  மாற்று
                  அறுவை சிகிச்சைக்கும்
                  சம்மதம்...

                  மதம் என்று வந்துவிட்டால்
                  பிடிவாதம்
                  வாக்குவாதம்...


                  மனித நேயம்
                  பேசும் சட்டமும்
                  மதத்தில்
                  வசிக்கும்
                  வாசிக்கும்


                  எரித்தும்
                  குண்டு வைத்து
                  நடத்தியும்
                  கொல்லும் மனம்

                  இருக்கும் வரை
                  இருக்காது
                  சரிசமம்...
                   
                  You might also like:

                    FRIDAY, NOVEMBER 25, 2011

                    கருச்சிதைவு


                    இன்பத்தின் 
                    மொழிகள் 
                    பேசி சிரிக்க...



                    இரவை 
                    அழைத்தது 
                    உறவு 




                    ஆலிங்கனத்தின் 
                    துணையோடு 
                    பயணம்...


                    நாளும் பந்தம் 
                    தொடர 
                    முளைத்தது...


                    முளைத்ததை 
                    சிதைக்க 
                    வாக்குவாதம்...


                    முடிவில் 
                    சிதைக்கப்பட்டது 
                    யார் என்றும்...
                    கொலை என்றும் 
                    அறியாமலே...


                    வருங்காலத்தை 
                    திட்டமிட்டு 
                    வரும் முன் 
                    தடுக்காமல் 
                    வளர விட்டு...


                    விதைக்கும் முன் 
                    யோசிக்காமல் 
                    புது உயிர் 
                    கொலையானது 
                    கோழைகளால்...
                     
                    You might also like:

                      விவசாயின் புலம்பல்...


                      வானம் பார்த்த 
                      பூமி...

                      மழையே
                      கையேந்தி 
                      நிற்கிறோம் 
                      இருக்கும் கொஞ்சம் 
                      நிலத்தில் 
                      நீர் பாசனம் 
                      செய்ய...

                      உன் வருகை 
                      மாறிப்போனதால் 
                      எங்கள் நிலைமையும் 
                      மாறித்தான் போனது 

                      விளை நிலங்களில் 
                      புதிய பாசனமாய் 
                      வீடுகள் 
                      அடுக்கு மாடிகள் என 
                      பதியம் போட்ட 
                      நிலையில்...

                      இருப்பதும் 
                      மாறாமல் இருக்க...
                      இருப்பதில் விதைக்க 
                      எங்களை ஏமாற்றாமல் 
                      அமைதியாய் வா...
                       
                      You might also like:

                        THURSDAY, NOVEMBER 24, 2011

                        மதராஸி...


                        பாலைவன 
                        வனவாசத்தின் 
                        முதல் நாள் 


                        நான் பேசிய 
                        ஆங்கிலம் 
                        அவனுக்கு 
                        தெரியவில்லை 


                        அவன் பேசும் 
                        அரபியும் 
                        இந்தியும் 
                        எனக்கு 
                        புரியவில்லை 


                        எனது மௌனத்தை 
                        கலைத்து சொன்னான் 
                        ம்ம்ம் 
                        மதராஸி என்று 


                        வியந்து  போனேனன் 
                        அவன் அனுபவத்தை 
                        கண்டு...


                        தாமரை இலையின் 
                        தண்ணீரைத் தூளி 
                        போலவே 
                        ஒட்டாமல் உறவு 
                        இந்தியாவில் 
                        நாம்...
                         
                        You might also like:

                          ரகசியம்...



                          பெண்ணிடம் 
                          ரகசியம் 
                          தங்காது 
                          சொல்லுவதுண்டு 

                          ரகசியம் 
                          கலையப்படலாம்
                          காரணம் பெண்ணல்ல
                          சூழ்நிலை...

                          வதந்திகளை 
                          பரபரப்பாய் 
                          சொல்லும் தினசரிகள்..
                          ஊடகங்கள் 
                          என்று தொடரும் 

                          அதில் ஆணுக்கும்
                          இடமுண்டு 
                          காதல் வந்தவுடன் 
                          நண்பனுடன்...

                          காலம் சென்றாலும் 
                          சொல்கிறான்
                          பழைய
                          ஒரு தலைக்காதலை...

                          இதில் பெண்கள் 
                           மட்டுமா...
                          இல்லை 
                          மனித வர்க்கமே 
                          அடக்கம்...
                           
                          You might also like:

                            பிணமாய்


                            பிணமாய் 
                            இருந்த இதயங்கள் 
                            இவனின் பிணத்தை 
                            பார்த்து 
                            உயிர்பிக்க...

                            வெட்டிய உறவுகள் 
                            ஒட்டிக்கொண்டன 
                            சாவு  வீட்டில்...


                            பங்காளி சண்டைகள் 
                            அழுகையோடு 
                            கரைக்கப்பட்டன


                            திட்டி தீர்த்த 
                            தூரத்து உறவுகளும் 


                            ஊர்காரர்களும் 
                            கண்ணீர் வடித்து 


                            மாலைகளோடு
                            மனம் மாற்றம்...


                            பெயரோடு வாழும்போது 
                            இவன் 
                            யார் என்றே 
                            புரியவில்லை 

                            இருக்கும் வரை 
                            இவன் மதிப்பு 
                            தெரியவில்லை 


                            மறைந்த பின்னே 
                            மறக்கும் மனங்கள்
                            இங்கே...


                            பிணமாய் 
                            போனபின்னே 
                            மரியாதைக்கு 
                            குறைவில்லை...

                             
                            You might also like:

                              கையேந்தும் நிலை



                              குழந்தை தொழிலாளர் 
                              தடுப்பு
                              சட்டமுண்டு

                              கையேந்தும் 
                              குழந்தைகளுக்கு,
                              அரவணைப்பு எங்குண்டு 

                              பிள்ளை இல்லாத 
                              பெற்றோர்களும்,
                              இவர்களை தத்து எடுக்க
                              தயக்கமுண்டு

                              பெற்றோ
                              ர்களும் 
                              வயிற்று பசிக்கு 
                              பிச்ச எடுக்க 
                              பிள்ளைகளை
                              அனுப்புவதுண்டு
                              இதை தொழிலாகவே 
                              சிலர் செய்து 
                              வருவதுமுண்டு...

                              பெற்றோர்கள் 
                              இருந்தும் அனாதைகள் 
                              இவர்கள் 

                              அரவணைக்கும் குணம் 
                              மறைந்தது இங்கு 
                              ஆதரவு குரல்கள் 
                              மடிந்தது இங்கு...

                              கல்வியும் 
                              வியாபாரமானதால்...

                              விடலைகள் 
                              பசிக்கும் 
                              கல்விக்கும் 
                              கையேந்தும் நிலை 
                              இன்று...

                               
                              You might also like:

                                WEDNESDAY, NOVEMBER 23, 2011

                                இலவச பேரலையால்...






                                கோபத்தை 
                                எழுச்சியை
                                ஐந்து வருடம் 
                                அடைக்காத்து 
                                சந்தர்ப்பம் பார்த்து 
                                வந்த நேரம்...


                                தேர்தலில் 
                                இலவச பேரலையால் 
                                அடித்து சொல்லப்பட்டு 
                                கொலை செய்யப்பட்டது 
                                ஜனநாயகம்...



                                ============================


                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                நம்பிக்கையோடு....



                                ஓட்டு யாகசம் 
                                கேட்டு 
                                மனிதர்களுக்குள் 
                                ஜாதியை விதைத்து 
                                மதத்தை தூண்டி 
                                கலவர பூமியாய் 
                                மாற்ற ஊர்வலம் 


                                தேசம் 
                                விசமிகளை 
                                சுமந்தாலும் 
                                மதத்தால் 
                                எரிந்தாலும்...
                                ஜாதியால் 
                                வேறுபட்டாலும்...




                                மதம் பிடித்த 
                                மிருங்களுக்குள் 
                                மனித நேயத்தோடு 
                                வாழ்ந்த, வாழும் 
                                மகான்கள் 
                                பூமி என்பதால்...



                                நாளைய 
                                வல்லரசுவாய் 
                                மாறவும் 
                                இன்றைய 
                                வல்லரசுக்கும் 
                                சவாலாவும்...


                                இந்தியா 
                                இந்தியர்களின் 
                                கனவோடு 
                                நம்பிக்கையோடு...



                                ========================



                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                MONDAY, NOVEMBER 21, 2011

                                காலை நேரக்கவிதை...



                                காலைநேரக் காபியும்
                                தினசரி பத்திரிக்கையும்
                                நடுத்தரவாதிகளுக்கு.

                                பசிப்போக்கும் கஞ்சியும்,
                                அசதியை போக்க காரமும்
                                ஏழைகளுக்கு!

                                தூக்கம் சோம்பல் 
                                முறித்தாலும்
                                பெட் காபி மணம் 
                                வரும் வரைக்கும்,
                                தூக்கமே உயர்(ந்த) ஜாதிக்கு!

                                காலை என்பது 
                                இன்றைய தொடக்கம்,
                                தொடக்கத்தை வேகமாக்கினால்
                                இன்றைய தினம்
                                வலுப்பெறும்!

                                இது நமக்கு !
                                ================ 


                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                SUNDAY, NOVEMBER 20, 2011

                                வரிகளை சுமக்கும் அப்பாவியாய்....

                                இலவசம் தருவதாய் 
                                கரை வேட்டிகளுடன் 
                                உடன்படிக்கை

                                பொதுமக்கள் தந்தனர் 
                                வெற்றிக் 
                                காணிக்கை.

                                நேற்றைய ஆட்சிகளின் 
                                விலைவாசி உயர்வு 
                                பேசப்பட்டது மேடையில்

                                வெற்றிக்கு பின் 
                                திருத்தத்துடன் 
                                செயல்படுத்தப்பட்டது
                                எங்கள் வாழ்க்கையில்...

                                நேற்றும் இன்றும் 
                                எதிர்க் கட்சிகள் மீது
                                குறைகளாய்...

                                வரிகள் மட்டும் 
                                எங்கள் மீது 
                                மொத்தமாய்..


                                கூட்டிக் கழித்து 
                                பார்த்தால் 
                                இலவசப் பொருள்கள் 
                                விலையோடு அதிகமாய்

                                இலசவம் 
                                நாங்கள் பணம் 
                                கொடுத்து வாங்கிய 
                                பொருளாய்...


                                பொது மக்கள்
                                ஏமாற்ந்த  நிலையில் 
                                வரிகளை சுமக்கும் 
                                அப்பாவியாய்....

                                ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                ஏமாற்றம்...





                                வரவு 
                                இலவசமாய்
                                சிலவு 
                                புது வரிகளோடு
                                அதிக பற்று 
                                ஏமாற்றம்.

                                கேட்டு ஏமாறுவது
                                வாடிக்கை
                                ஐந்தாண்டு   ஒருமுறை
                                நடக்கும் நடவடிக்கை.


                                +++++++++++++++++++++++++++++++++++++++++
                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                கருத்துகள் இல்லை:

                                கருத்துரையிடுக