ஹைக்கூ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FRIDAY, NOVEMBER 25, 2011
மழைத்தூறல்...ஹைக்கூ கவிதைகள்.
மழைத் தூறலில்
பூக்களில்லாமல்
மணம்...
================
களைத்தது
இரவின் மௌனத்தை
தூறல்...
===============
தூறிய தூறல்
வீட்டுக்கூரைகளில்
இசைத்தது...
=================
பூமிக்கு
புனித நீராட்டுவிழா
மழைத்தூறல்...
================
SATURDAY, NOVEMBER 19, 2011
கூட்டணி!
நேற்று கூட்டம் போட்டு
திட்டித் தீர்த்தவர்கள்
ஒரே கூட்டணி!
=======================
நேற்று எதிரி
இன்று நண்பன்
நாளை கேள்விக்குறி.
======================
அடிதடி
வெட்டு குத்து
மறைத்தது...
=====================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
TUESDAY, NOVEMBER 08, 2011
உண்ணாவிரதம்.
செய்த குற்றங்களை
மறைக்க போர்வை
உண்ணாவிரதம்.
===========================
திசைத் திருப்ப
திருத்தப்பட்ட தலைப்பு
உண்ணாவிரதம்.
========================
மனசாட்சி புதைக்கப்பட்டு
மௌன அஞ்சலி
உண்ணாவிரதம்.
==========================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
MONDAY, NOVEMBER 07, 2011
தவளை.
இலவச நீர் தொட்டி
கத்தி மகிழ்ந்தது
தவளை.
===================
மழைச்சத்தம் சற்று
ஓய்ந்தது போனது
தவளைக்காக.
==================
மழைத் தூறலுடன்
காதல்ப்பாட்டு
தவளை.
தெலுங்கானா...
அண்ணன் தம்பிகள்
பாகப்பிரிவினை
தெலுங்கானா
==================
அக்கா தங்கை
சக்களத்தி சண்டை
தெலுங்கானா
====================
விவாகரத்து கேட்டு
தெருக்களில் போராட்டம்
ஆந்திரா.
=======================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்.SUNDAY, NOVEMBER 06, 2011
நாணயம்.
நாணயம் தடுமாற
இடமாறியது
வெற்றி.
==================
வாக்குறுதிகள்
மறுக்கப்பட மறைந்தது
நாணயம்.
==================
நாணயம் கேட்கும்
அதிகாரிகள்!
SATURDAY, NOVEMBER 05, 2011
விற்பனைக்கு.ஹைக்கூ கவிதைகள்
வாக்குறுதி வாக்குகளும்
போட்டி போட்டன
விற்பனைக்கு.
=======================
தேர்தல் களம்
மதங்கள் போட்டி
தோற்றது மனிதம்.
========================
ஜனநாயகம்
பேரம் பேசப்பட்டது
இலவசம்.
========================
தோற்றது ஜனநாயகம்.
பாபரா ராமரா
போட்டியில் தோற்றது
ஜனநாயகம்.
ஜனநாயகம்.
=====================
பாபரா ராமரா
தீர்ப்பு இல்லாத
பட்டிமன்றம்.
======================
தேர்தல் சந்தை
பாபரும் ராமரும்
விற்பனை.
பாபரும் ராமரும்
விற்பனை.
WEDNESDAY, NOVEMBER 02, 2011
தீக்குச்சி.
கந்தகப் பள்ளியில்
பிஞ்சுகள் எழுதிய
கவிதைகள்!
=================
எழுத மறந்த விரல்கள்
எண்ணிப்போட்டன
தீப்பெட்டி.
=====================
ஏழ்மை உரசிப்பார்க்க
குழந்தைகள் கையில்
கந்தகம்.
இயற்கை.
யார் இவன் என ரசித்தனர்.
கதிரவன்.
============================
இமைகள் இமைக்க மறந்தன
இன்றும் இளமையோடு
இயற்கை.
============================
இமைகள் இமைக்க மறந்தன
இன்றும் இளமையோடு
இயற்கை.
============================
சொல்லி சிலிர்க்கவைத்தது
அந்தி சிரித்த வாணம்
தம்பதிகளை.
TUESDAY, NOVEMBER 01, 2011
SUNDAY, OCTOBER 30, 2011
இயற்கையும் இளமையும்...
இயற்கையும் இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!
===========================
இவளைக் கண்டு
இயற்கை எழுதிய கடிதம்
மழை.
===========================
இவளை பார்த்தே
மலையோடு மோதியது
வெண் மேகங்கள்.
===========================
SATURDAY, OCTOBER 29, 2011
பயணம்!
காட்டும் முதுமை
விரட்ட...
======================
மழையோடு, மனைவி
துணையோடு கரைந்தது
முதுமை.
======================
காலம் மாறினாலும்
களம் சொல்லும்
காதலை...
=======================
MONDAY, OCTOBER 24, 2011
FRIDAY, OCTOBER 21, 2011
வறுமை ...!
வறுமையின் விழும்புகள்
தழும்புகளாய் மாறின
இவர்களுக்கு.
==============================
==============================
வரண்ட பூமியை
செழுமையாக்க துடித்தது
வறுமை!
===========================
படிப்பதை மறந்தனர்
வறுமையின் மயக்கத்தில்
பிஞ்சுகள்!
===========================
பிழைக்க கற்ற இவர்கள்
படிக்க மறந்தனர்
வறுமையால்!
MONDAY, OCTOBER 17, 2011
SATURDAY, OCTOBER 15, 2011
WEDNESDAY, OCTOBER 12, 2011
பிரிவு சொல்லும்...
அடைத்துக் கொண்டன
பிரிவு !
================
ஒரே இரவு, ஒரே நிலவு ,
நேற்றும் ,இன்றும் சொல்லும்,
நம்மை தவிர!
===================
வாய்க்கு கிடைக்கவில்லை,
நம் நிலை !
================================
வாலிபத்தில் பணத்துக்காக பயணம்,
ஒன்றும் மிச்சமில்லை,
வயோதிகன்!===============================
ஒன்றும் மிச்சமில்லை,
வயோதிகன்!===============================
MONDAY, FEBRUARY 22, 2010
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக