நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.அனைத்து இடுகைகளையும் காண்பி
MONDAY, DECEMBER 05, 2011
புது வீடு...
அடுக்கி வைக்கப்பட்ட
சிமென்ட் கோபுரத்தின்
மூலையில்
எங்கள் மூளைக்கு
கிடைத்த பரிசாய்
புது வீடு...
நகரத்தின் மத்தியில்
மரங்கள் இல்லாத
நிலையில் வானத்தை
பார்க்க...
அப்பா வந்தார்
என்னடா இது
வீடா இது...
வசைப்பாடினார்
அவரியின் பூர்வீக
வீட்டை நினைத்த
வண்ணம்...
என்ன சொல்லுவது
அவரிடம்
இதுக்கே
நாங்கள்
பட்ட கஷ்டத்தை...
எங்களுக்கு சரிப்பா
உங்கள் விருப்படி
இருக்காது
சாரிப்பா
என்று பதிலோடு
நிற்க...
சொன்னார்
எல்லாம் இருக்க
நாங்கள் கட்டினோம்
வீட்டை...
நீங்கள் கட்டி
இனி வாங்கணும்
காற்று உட்பட...
உண்மை
உரைத்தாலும்
உறுதியாய்
உள்ளம்...
வாடகையை
இல்லாமல்...
இருந்ததை
தொலைத்து
அலுவலகத்தில்
லோன் எடுத்து...
நாங்கள்
வாங்கிய வீடாய்
இருப்பதால்
அமைதியாய்...
வீட்டியில்
மட்டும்
அழகுக்கு செடிகளை
வளர்க்க
திட்டத்தோடு...
FRIDAY, DECEMBER 02, 2011
சிலா உறவுகள் அப்படித்தான்...
உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை
மறைத்துக் கொள்ளாமல்
பேசியே கொல்லும்
சில
உறவுகள் அப்படித்தான்...
வார்த்தைகளை
கடை விரித்து
ஏலம் போட்டு
விலகிப் போகும்
மனமாய்
உறவுகள் அப்படித்தான்...
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...
அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...
உண்மை கசக்கும்
உண்மையை
சொன்னால்...
பத்தோடு ஒன்று
அத்தோடு ஒன்றாய்
போனால் சரி
பிறந்து விட்டமே
எப்படி போவது
மனச் சாட்சி
கேட்டால்
பழிக்கு பலியாகி
உன்னையே குறை
சொல்லும்
சேராத தண்டவாளமாய்
சிலா
உறவுகள் அப்படித்தான்...
WEDNESDAY, NOVEMBER 30, 2011
தொலைதூரக்காதலாய்
நிலைமாறிய
கவியாய்
மனதை மயக்கும்
மனதை மயக்கும்
நிலையாய்
நிறம் மாறும்
மனம் விரும்பும்
மனம் விரும்பும்
மழையே விடலைப்
பருவத்தின்
மண்ணுக்கும்
இந்த மழையோ
மலைக்குள்
தொலைதூரக்காதலாய்
அணைத்துக்கொள்ளும்.
மழையா!
பள்ளிக்கு விடுமுறை
மழையா!
காகித கப்பல் ஓட்டம்
மழையா
சாரலோடு ஆட்டம்
மழையா!
ஆனந்த ஆர்பாட்டம்
இளமை பருவத்தை
இன்றும் நினைக்க
இனிக்கும்...
தொலைதுராக்
காதல் மழை
மண்ணுக்கும்
மணக்கும் மலராய்
விதைக்கும்
விதைக்கும்
விதைக்கு உயிராய்
எனக்கு உறவாய்
எனக்கு உறவாய்
இன்றும் மழையே
என் தொலைதூரக்
என் தொலைதூரக்
காதலியாய்...
சிறு துளியோ
சிறு துளியோ
பட்டால் சிலிர்க்கும்
மனதை மயக்கும்
நனைந்து சென்றால்
மனதை மயக்கும்
நனைந்து சென்றால்
இனிய இன்பத்தை
கொடுக்கும்...
கொடுக்கும்...
இந்த மழையோ
மலைக்குள்
அருவியாய்
எனக்குள்
எனக்குள்
உணர்வாய்
உருமாறி
என்றும்
காதல் பேசும்
மழையே
தொலைதூரக்காதலாய்
FRIDAY, NOVEMBER 25, 2011
அம்மா...
அம்மா!
ஆயிரம் சொந்தங்கள்
வந்தாலும்
உனக்கு நிகர்
யார் அம்மா!
ஒவ்வொரு
முறையும்
நான் உன்னை
பார்க்கும் போதும்
பாசத்தோடு
அணைக்கும்
நிகழ்வுக்கு
ஈடு ஏதம்மா .
நான் வருகிறேன்
என்றாலே
சிறு குழந்தையாய்
நீ மாறுவாய்...
முடியாத நிலையிலும்
முண்டியடித்து
நீ சமைப்பாய்...
வேண்டாம்
என்றாலும்
கேட்கவா போறாய்
வகைக்கு ஒன்னு
வேலைக்கு ஒன்னு
என சமைத்து தான்
முடிப்பாய்
போதும் போதும்
என சொன்னாலும்
இன்னும் கொஞ்சம்
என்று
கொஞ்சியே
வயிறு முட்ட
உண்ண வைப்பாய்..
நான் வளர்ந்து
போனாலும்
இன்னும் குழந்தையாய்
எண்ணி ஊட்டி தான்
விடுவாய்
உன்னோடு நான்
இருந்த ஒவ்வொரு
வினாடிகளும்
குழந்தையாய் தான்
மாறிப்போவேன்...
நேற்று
உன்னை விட்டு
வந்த பின்
உன்னோடு
இருந்த நாட்களை
நினைத்தப்படி...
அடுத்த விடுமுறை
வரைக்கும்
உன் நினைவுகள்
சுமந்தபடி...
SATURDAY, NOVEMBER 19, 2011
வண்ணங்கள்
காதலின் வண்ணம்
கவிதைகள்!
வெற்றின் வண்ணம்
நேற்றைய தோல்வி !
மனதின் வண்ணம்
நிம்மதி!
தாயின் வண்ணம்
பிரசவத்தில்!
மனைவியின் வண்ணம்
இல்லறத்தில்!
அரசியல்வாதின் வண்ணம்
தேர்தல் நேரத்தில் .
ஏமாளிகளின் வண்ணம்
அவசரத்தில்!
இல்லறத்தில்!
அரசியல்வாதின் வண்ணம்
தேர்தல் நேரத்தில் .
ஏமாளிகளின் வண்ணம்
அவசரத்தில்!
ஈகையின் வண்ணம்
கொடுப்பதில்!
கொடுப்பதில்!
நேற்றிய வண்ணம்
நினைவுகளில்
இன்றைய வண்ணம்
இனிமையில்
நாளைய வண்ணம்
எதிர்ப்பார்ப்பில்
எனது வண்ணம்
எண்ணியதை கவியாய் சொல்வதில்.
=================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
நட்புக்குள்ள வியப்பு
பூக்களில் சிறந்த பூ
நட்பு!
நட்பின் மொழி
அன்போடு இணைப்பு.
நட்புக்கு இல்லை
எதிர்பார்ப்பு .
காலம் போனாலும்
நட்பின் நினைப்பு ...
பாசமாய் பிரதிபலிப்பு
நம்மோடு உறவாடும்
உயிர்ப்பு நட்பு
நட்புக்கொண்டால்
ஒரு ஈர்ப்பு.
உள்ளத்தை அறியும்
வாய்ப்பு,
ஆண் .பெண் பாரத
இணைப்பு...
உன்னத நட்பு
நம்மோடு உறவாடும்
உயிர்ப்பு நட்பு
நட்புக்கொண்டால்
ஒரு ஈர்ப்பு.
உள்ளத்தை அறியும்
வாய்ப்பு,
ஆண் .பெண் பாரத
இணைப்பு...
உன்னத நட்பு
உள்ளத்தின் பூரிப்பு
நேசத்தின் உடன்பிறப்பு
நட்புக்குள்ள வியப்பு
நட்புக்கு மட்டுமே உகப்பு .
இதுவே நட்புக்கு சிறப்பு!
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
நட்புக்குள்ள வியப்பு
நட்புக்கு மட்டுமே உகப்பு .
இதுவே நட்புக்கு சிறப்பு!
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
WEDNESDAY, NOVEMBER 16, 2011
மீண்டும் மிதிவண்டி எடுப்போம்...
நாம்
மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது...
நல்ல தலைவர்கள்
நடிகை முன்
தேர்தலில்
தேர்தலில்
தோற்றது போல
அக்கறையும்
அக்கறையும்
அவசியமும்
உடலுக்குள்
அடைக்கலம்
அடைக்கலம்
அறிந்தும்
அலட்சியம்.
இயற்கை தந்த பரிசு
இயற்கை தந்த பரிசு
ஓடாமல்
ஒரே இடத்தில்
கொழுப்புக்கள்
கரைக்க மட்டும்
பயன்படும்
பயன்படும்
பின் ஓரத்தில் ஒதுங்கும் .
சொந்த
தொழிலுக்கு உறவாக்கி...
புதிய தொழிலை
புதிய தொழிலை
உருவாக்கி...
வாழ்வுக்கு உரமானது
இன்று ஓரமானது.
இளமைக்கு
மீண்டும் மிதிவண்டிவாழ்வுக்கு உரமானது
இன்று ஓரமானது.
இளமைக்கு
பக்கம் நீ திருப்பு...
மீதமுள்ள வாழ்வை
விரும்பி
இளமைக்கு இதை
நம்பி
மீதிவண்டியை
மீண்டும்
தெருக்களில் ஓட்டி பழகு ...
தெருக்களில் ஓட்டி பழகு ...
எரிபொருளின் விலையை
அறிந்து...
உன் நிலையை உணர்ந்து
ஓட்டி வந்தால்
உன் உடலுக்கு அழகு
வருவதை பாரு...
உன் உடலுக்கு அழகு
வருவதை பாரு...
இயற்கையோடு
நீ மோதி
மாசுபடாமல்
ஒரு நகர்வலம்...
மீண்டும் மிதிவண்டி
எடுத்து ஊர்வலம்...
உடல் நலம் சிறக்க
கூட்டத்தை குறைக்க
மீண்டும் நாம்
மிதிவண்டியை எடுப்போம்...
மீதி உள்ள வாழ்க்கையை
விதி மீறாமல் கடப்போம்
உடல் நலம் காப்போம்!
===========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
TUESDAY, NOVEMBER 15, 2011
உங்களுடன்! எனது முந்நூறு....
ஒப்பனை அறைக்குள்
புது அவதாரமாய்
கவிதைகள்.
மரபுகளும்
கொஞ்சம் தள்ளி
வைக்கப்பட்டு
புதுபொலிவோடு
புதுக்கவிதை
ஊர்வலம்.
அவசர உலகத்தில்
டெஸ்ட் டிப்
குழந்தையாய்
கருவின் பிரசவம்.
எளிய நடைகளுடன்
எள்ளிய நடைகளின்
சமூகப்பார்வை...
இணையத்தில்
இதயங்களை வெல்ல
தமிழர்களின்
போராட்டம்...
இவர்களில் நானும்
ஒருவன்....
உங்களுடன்!
=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
SUNDAY, NOVEMBER 13, 2011
காரம் ..........
உறவுகள்
கசந்துபோனால்
இனிப்பான
நிகழ்வுகளும்
மறந்து போகிறது.
விபரம் அறிந்து
விடை சொன்னால்
விபரிதமே உறவுக்குள்.
காரணம்
காரசாரமாய்
மாறினால்...
குழம்பில் மட்டுமா
காரம் ..........
சில உறவுகளின்
வார்த்தைகளும்
நாக்கிலும்.
=========================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கசந்துபோனால்
இனிப்பான
நிகழ்வுகளும்
மறந்து போகிறது.
விபரம் அறிந்து
விடை சொன்னால்
விபரிதமே உறவுக்குள்.
காரணம்
காரசாரமாய்
மாறினால்...
குழம்பில் மட்டுமா
காரம் ..........
சில உறவுகளின்
வார்த்தைகளும்
நாக்கிலும்.
=========================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
WEDNESDAY, NOVEMBER 09, 2011
பயண முடிவுக்கு...
நாளைய தலைமுறையின்
வாழ்க்கைக்காக
எங்கள் வாழ்க்கையை
தொலைக்கவே
பாலைவனம் வந்தோம்
இன்பத்தை தொலைத்து
குடும்பத்தை மறந்து
பாசத்தை இழந்து
வாங்கப்பட்டன
பணம்!நாளைய தேவைக்கு
இன்று சேமிக்க
விற்கப்பட்டன
இளமை...
மரண செய்தியை
கேட்டு மரமாய்...
நடமாடும் கல்லாய்
உறவுகளின் திருமணமா
வீடியோவில்...
செய்திகள் பரிமாற்றம்
தொலைபேசியில்...
தண்ணீரை சேமிக்கும்
ஒட்டகத்தை போல
விடுமுறைக்காக
கனவு காண்பதிலும்
விடுமுறைக்காக
காத்திருப்பதில் தான்
காலமே ஓட்டம்
திரும்பி பார்த்தால்
முடி நரை சொல்லும்
இன்னும் எங்கள் முறை
வரவில்லை
ஊரில் வாழ...
காத்திருக்கிறோம்
முதுமையோடு
பயண
முடிவுக்கு...
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
FRIDAY, NOVEMBER 04, 2011
நினைவுகளை சுவாசித்து...
பெருநாள் என்றால்
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.
ஊரெல்லாம்
கொண்டாட்டம்.
பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்
மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.
துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.
இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு
வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு
ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .
பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.
தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி
பெருநாள்
திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.
பெருநாள்!
இரவோடு செல்ல...
மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...
வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.
அவசர உலகத்தில்
இந்த நினைவுகளை
சற்று சுவாசித்து
கொண்டாட்டம்.
பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்
மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.
துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.
இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு
வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு
போர்த்தப்படும்
வண்ணக்கொடிகள்
பந்தலாய் கட்டப்படும்
ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .
பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.
தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி
கருத்துப் பரிமாற்றம்.
எதுவும் அறியாமல்
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.
நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.
இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.
எதுவும் அறியாமல்
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.
நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.
இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.
புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.
நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.
சூரியன் நிறமாறும்
மாலை நேரம்
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.
நண்பர்கள் படைச் சூழ
சிரிப்பின் சில்லறைகளை
முகத்துக்குள் வழங்கப்படும் .
தெருவெங்கும்
வாலிபக் கன்னிகளின்
தேரோட்டம்
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.
சூரியன் நிறமாறும்
மாலை நேரம்
பெருநாள்
மெல்ல மெல்ல
செல்லுவதை
அறிந்தாலும்
செல்லுவதை
அறிந்தாலும்
திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.
பெருநாள்!
இரவோடு செல்ல...
மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...
வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.
அவசர உலகத்தில்
இந்த நினைவுகளை
சற்று சுவாசித்து
பாலைவனத்திலிருக்கும்
நானும்...
மீண்டும் பார்க்கிறேன்...
பூர்வீக வீடு.
மனதுக்குள் இன்னும்
அழிந்து போகாமல்
பாசமாய் பசுமையாய்
வாழ்ந்த காலத்தை
காட்சியாய் ஓடும்
பூர்வீக வீடு.
இதோ இந்த
புதுத் தெருவில் தானே
முன்னோர்களின்
முகவரி இருந்தது.
உறவுகளும்
சொந்தங்களும்,
கூடிய கூடு.
பாசப் பறவைகள்
இறந்துபோனதால்
எல்லாம் மாறித்தானே
போனது.
வறுமை வலைவிரிக்க
வீடும் கை மாற
இன்று நிறமாறி
குலமாறிதனே இருக்கு.
ஓட்டு வீடு.
பெரிய திண்ணையும்
திண்ணையின்
இடதுப்பக்கம்
சாய்வாய் அமர
சிமென்ட் சிமாசனம்.
இங்கு தானே
நான் உட்கர்ந்து இருந்தேன்.
உறவுகளுடன்,
நண்பர்களுடன் பேசி சிரித்தேன்.
தேக்கு மர தூண்கள்
வீட்டை தாங்கி நிற்கும்
பார்க்கும் போதே ஈர்க்கும்.
வாசக்கதவுகள் .
இரும்புக்கோட்டையாய்
வீட்டைக்கக்காக்கும்.
இதை நான் பூட்டி
பார்த்ததில்லை.
மிதிவண்டியை
இருசக்கர
வாகனத்தை நிற்க
இடம்.
அடுத்து ஒரு கதவு,
பாதுக்காப்புக்கு.
அடுத்து பெரிய
வாசல் ,
இன்று இதுக்குள்ள
வீடு கட்டும் நிலை.
மழைக்காலத்தில்
காகிதக் கப்பல்
இங்கு தானே விட்டேன்.
வாசல் ஓரத்தில்
படுத்துவிட்டால் போதும்
காற்றை மின்சாரமூலம்
கடன் வாங்க வேண்டாம்.
தென்றல் வந்து
கொஞ்சும்,
தூக்கம் கண்ணுக்குள் வந்து
கெஞ்சும்.
இதை ஒட்டி கூடம் ,
விருந்து என்றால்
ஒரு தடவை
முந்நூறு பேர்
அமர்ந்து சாப்பிடலாமே.இரண்டு அறைகள்,
கூடத்தை ஒட்டி.
அடுத்து சாமன்கள்
வைக்க அறை என
ஒவ்வொரு அறைகளும்
இன்று வாடகை வீடாய்
இருப்பதை கூறலாம்.
சமையல் செய்கிற போது
காற்றுக்கு பஞ்சமில்லை.
சமையலறை இன்று
போல் குறிகிய இடமாயில்லை.
பெரிய நீர் தொட்டி
ஒரு தடவை நிரப்பிவிட்டால்
தண்ணீருக்கு
பஞ்சம் வந்ததேயில்லை.
இன்னும் சொல்லலாம்,
எங்கள் பூர்வீக வீட்டை
நினைக்கும் போதும்
சொல்லும் போதும்
கண்ணும் கலங்கும்
எனக்கு...
எல்லாம் இன்னும்
மனதுக்குள்...
எங்கள் வீடோ
இன்று மண்ணுக்குள்.
இருந்தாலும்
மனதில் இன்னும் படமாய்
இருக்க
நினைவுகளோடு
இன்றும்
படமாய் ஓடிக்கொண்டு தான்இருக்கு.
THURSDAY, NOVEMBER 03, 2011
தன் வலைக்குள்
இவளை பார்க்கும்
போதெல்லாம்
ஒரு வித ஈர்ப்பு
தொட்டுப் பார்த்து
தட்டிப் பார்ப்பதும்
எனது வழக்கம்.
இவளை அடைய
ஒரு ஆசை
வருமானமோ
போதவில்லை.
சேமிப்புக் கணக்கில்
வரவுவைத்து
இவள் வரவுக்கு
காத்திருந்தேன் .
அந்த நாளும் வந்தது
பேரம் பேசி
ஒரு
விலை பேசி,
முடித்து விட்டேன்.
மனதுக்குள் ஆனந்தம்
நோகமால் எடுத்துவந்தேன்
இன்று!
தனிமை
இரவுக்குள் இருக்க
பதட்டத்தோடு
என் மடிக்குள்
வைத்து
மேலாடையை
அவிழ்த்தேன் ...
கருப்பு நிற வைரமாய்
அங்கம் சிரிக்க
விரித்தேன்
அவள் மேனியை ....
மின்சாரத்தொடு
தொடர்புக் கொடுத்து
இயக்கினேன் அவளை
விண்டோஸ் 7 என்று
சிரித்த முகமாய்
தன் வலைக்குள்
என்னை இணைத்தாள்.
இந்த மடிக் கணினி!
TUESDAY, NOVEMBER 01, 2011
இன்னும் இங்கு ....
வாழ்ந்த நிலை அறிய
கரைந்துப்போன
சேமித்த நிமிடங்களை
நிறுத்திப் பார்த்தேன்
தூக்கத்தோடு
சில மணித்துளிகள்
திரை அரங்கத்தில்
சில மணித்துளிகள்,
சில்லறையாய்
சிதறிய நிலையில்...
வாழ்க்கையில் கால் பகுதி
சிலவான நிலை.
மீண்டும் கணக்கில்
பள்ளி கூடத்திலும்...
நண்பர்களுடனும் கழிப்பட்ட
நேரத்தை பார்த்தால்...
பாதி வாழ்க்கை போய்விட்டது.
உழைக்க வந்து வருடங்கள்
பல ஓடிவிட்டது.
வாழ்க்கையை பார்த்தேன்
நரை தான் மிச்சம் என்றது.
நானும் சொல்கிறேன்
வாழ்கிறேன் என்று
கூட்டி கழித்து பார்த்தால்
காணமல் போன வாழக்கை
எங்கே என்று தேடுகிறது....
எள்ளி நகைக்கிறது
இன்பமுமில்லாமல்
இறப்புகளுக்கு கூட போகாமல்
சுப காரியத்திலும்
சுவாசிக்காமல்....
சீய் என்னடா வாழ்க்கை
எனது உள்ளம் கேட்க...
சொரனையற்ற நிலையில்
சிந்திக்க மறந்து
சிரிப்புடன் நான்
இன்னும் இங்கு ....
SUNDAY, OCTOBER 23, 2011
பழைய வாழ்க்கை!
நிகழ்காலம், போர்க்காலமாய்,
காட்சியளிக்க...
எதிர்காலம் கேள்விக்குறியாய்
முன்னே நிற்க...
முன்னே நிற்க...
பொற்காலம்,இறந்தக்காலமாய்
இருந்தாலும் ,மறைந்தாலும்,
பொற்காலம் அழியாத
புதையலாய் இன்றும் உள்ளது
மாமன், மச்சான் உறவுகள்
கூட்டு வாழ்க்கை, மனம்
மகிழும் தோட்டம்,திண்ணை,
பெரிய வீடு என்ற நிலை
அந்த பொற்காலம்.
அன்பும், பாசமும்,
அன்பும், பாசமும்,
இல்லம் முழுதும் ஒளி வீச ,
விடலைகளின் ஒலிகள் முழங்க,
வாழ்ந்தக் காலமே பொற்காலம்.
விடலைகளின் ஒலிகள் முழங்க,
வாழ்ந்தக் காலமே பொற்காலம்.
அடுக்கு மாடிக்குள்
அகப்பட்டு வாழும் வாழ்க்கையோ ...
நாம் இருவர்,நமக்கு ஒருவர் என்ற
துளிப்பாவாய் இன்று!
நாம் இருவர்,நமக்கு ஒருவர் என்ற
துளிப்பாவாய் இன்று!
மரபுக்கவிதைகளாய்,
பேசிய குடும்பங்கள் எல்லாம்
ஹைக்கூ கவிதையாய்
சுருக்கிக் கொண்டன!
கலாச்சார மாற்றமும்,
வருமான தேவைகளும்...
பொற்காலத் தேவதையை,
புதைத்தது!
பகட்டான வாழ்க்கை
பணத்தோடு பார்க்க...
பாசங்கள் எல்லாம்
தூக்கி எறியப்பட்டன!
யாரங்கே!கொஞ்சம்
யாரங்கே!கொஞ்சம்
இந்த அவசர உலகத்திலிருந்து
என்னை மீட்டு போங்கள்!
மனிதனாய் மாறவேண்டும்!
மீண்டும் வருமா பொற்காலம்?
மீட்டு தருமா வருங்காலம்?
கேள்வியே இன்று.
வாழ்ந்த அந்த பொற்காலாத்தை
மனதில் கொண்டு
வாழ்க்கை போகிறது இங்கு !
TUESDAY, OCTOBER 11, 2011
கூட்டாஞ்சோறு!
இளமைக் காலத்தில்,
சமையல் அறியாத நேரத்தில்,
நடத்திய விருந்து!
வெந்தது பாதி,
வேகாதது பாதி,
இருந்தும் உண்ட விருந்து!
அரிசியின் ரகங்கள்
கூட்டணி சேர
தோப்புக்குள் விருந்து !
விடலைகளின் மகிழ்ச்சியில்,
உப்பு ,காரம், மணமில்லாமல்,
மனம் விரும்பிய விருந்து!
யார் அங்கே!
விடலையாய் நான் மீண்டும் மாறிட
அழைத்துப் போங்கள்!
இந்த அவரச உலகத்தை
நான் மறந்து வாழ!
என்னை நானே பார்த்துக்கொள்ள !
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
SATURDAY, OCTOBER 08, 2011
நட்பு !
நண்பர்களின் பாப்புக்களின்,அன்பை விரும்புகிறேன்!
நண்பர்களின் தாய்களின்,பாசத்தை நேசிக்கிறேன் !
நண்பர்களை எனது உயிராவே மதிக்கிறேன்!
நண்பர்கள் இவர்கள் என்று சொல்லி மகிழ்கிறேன்!
வாலிபம் கடந்து போன பாதையை
வியப்புடன் இன்னும் பார்க்கிறேன்!
சில்லறை சிரிப்புக்கள் யெல்லாம்
சிலவான நிமிஷங்களை நினைக்கிறேன்!
இரவில் நிலவாய் நட்பு அமைத்திட எண்ணுகிறேன்!
இருள் போக்கும் சூரியனாய் நட்பு மாறிட சொல்கிறேன் !
இன்னல் போக்கும் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்!
இன்னும் எங்கள் நட்பு தொடர வேண்டுகிறேன்!
FRIDAY, OCTOBER 07, 2011
திண்ணை
பள்ளிவாசல் அருகிலிருக்கும்,
முச்சந்திக்கு மறு பெயர்
சாவடி!
எங்கள் வாலிப தேசத்தின்
வசந்த மரமாய்
இந்த சாவடி!
ஆறடி ஜப்பான் வீடுத் திண்ணையும்
குண்டாரி வீட்டுத் திண்ணையும்,
சந்தோஷங்களை கொட்டி
தாலாட்டு பாடியது என்றால்
பொயில்லை!
எங்களது வாலிபத்தின்
பல மணித்துளிகளை
இன்னும் நாங்கள் அங்கு தான்
சேமித்து வைத்திருக்கிறோம்!
தூங்காமலே நாங்கள்
கண்ட கனவுகள் தான்
எத்தனை ,எத்தனை ...
எண்ணங்களையும்,
எங்களையும் சேர்த்து வைத்தது
இந்த திண்ணை தான்!
எங்கள் சிரிப்புகளை,
சில்லறையாய் சிந்தியதும்
இங்கு தான்!
கடந்த வாலிபத்தை,
கவிதையாய் சொல்லும்!
நான் இந்த திண்ணையை
கடக்கும் போது !
பழைய நினைவுகளை.
நினைக்கும் போது
நெஞ்சத்தை நெகிழச்செய்யும்!
அமீர் ,இப்திகா,,ரபி,ஜகாங்கீர்,
ஜவகர்,ஜகாங்கீர்,ஆசாத்,அலாவுதின்
தவக்கல்,முத்தார்,மாலிக்,அஜிஸ்,
ஜப்பார்,அக்கிள் ,ஹாஜா,என
எல்லோரும் ஒன்று கூடி,
வட்டசபை மாநாடு ,
நடத்திய திண்ணை!
இன்னும், எனக்கும்,
என் நண்பர்களுக்கும்,
அதிசியத்தின் ஒன்று தான் !
இந்த திண்ணை எங்களின்
வாலிபத்தின் போதிமரம் !
நாங்கள் மறையும் வரை
வாலிபத்தின் போதிமரம் !
நாங்கள் மறையும் வரை
எங்கள் வரலாறுகளை சொல்லும்.
பழையதை மாறமல்,மாற்றாமல்,
மறக்காமல் இந்த திண்ணையும்
எங்களை போலவே, இன்றும் அப்படியே...
WEDNESDAY, OCTOBER 05, 2011
புதுத்தெரு !
புதுத்தெரு !
வரலாறுகளை ,தனக்குள்
உள்ளடக்கி,இன்று
இடிபாடுகிடையில்,
பல உண்மைகள்
புதைந்து இருக்கு .
வசதிப் படைத்த சீமான்கள்
வாழ்ந்த வீடுகள் எல்லாம்
இடிபாடுகளோடு
இன்று பொலிவு இழந்த
நிலையில்...
ஊரை ஆண்டவர்களும்,
உலகம் போற்றும் மேதைகளும்,
தன் சுயரூபம் மாறித்தான்
போனார்கள்!
வளரும் தலைமுறைக்கு,
அறியமாலே போனார்கள் .
புதுத்தெரு என்னும்
பூலோகத்தில்
பூர்வீகம் அழிந்துப்போனது
வரலாறுகளை புரிந்துக்கொண்டால்
அந்த தெருவுக்கு
ஒரு வீரியமுண்டு
என்பதை உணர்ந்துக்கொண்டால்...
வீரமும் ,விவேகமும்,
கலந்த தெரு
இந்த புதுத்தெரு என்று
மார்தட்டிச் சொல்லலாம்!
SATURDAY, OCTOBER 01, 2011
தந்தைக்காக!
தந்தை தானே
முன் மாதிரியானவர்.
அழகான சிரித்த
முகத்துக்கு சொந்தக்காரர்!
சுறுசுருப்பின் சூத்திரம் அறிந்தவர்.
ஆர்பாட்டமில்லாத பேச்சுக்கும் ,
வெள்ளை நிற உடைக்கும்
பிள்ளை மனதுக்கும் முகவரியானவர்!
எனக்கு முன்மாதிரியானவர்
எங்கள் வம்சத்துக்கு
வான் மதியானவர்.
ஆணிவேரானவர்!
ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து !
ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,
சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.
தந்தையும் தாயாகலாம்,தாய்க்கும் தாயாகலாம்,
தந்தையே அதற்கு நீயே உதாரணமாகலாம்.
மண்ணறையில் சுகமாக,இறைவன் ஒளியில் நீ துயில,
மறுமைக்குள் மறுபிரவேசம் நடக்கும் வரை நீ உறங்க,
எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக,
தினம் தொழுது ,அழுது கேட்டுவருவேன்,உங்களுக்காக!
எனது தந்தையின் நினைவு நாள்,அன்று எழுதப்பட்ட கவிதை
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக