செவ்வாய், 6 டிசம்பர், 2011

மிளகு.!மருத்துவக் கவிதைகள் .


மிளகு.!மருத்துவக் கவிதைகள் .





மிளகு.!
விஷத்தை முறிக்கும்
விசியம் இதிலிருக்கு.

கை வைத்தியத்தில்
மிளகுக்கே முன்வுரிமை.

எதிரி வீடுக்கும்,
கைப் பிடி மிளகோடு
பயமின்றிப் போகலாம்.

மிளகு மற்றும் வால் மிளகு 
என இரு வகைப்படும்.

மிளகுக்கு 
மலையாளி, குறுமிளகு 
கோளகம்.என்ற 
பெயரும் உண்டு 

கொடிவகை செடி.
இதன் காய்களை
காயவைத்தாலே 
மிளகு அவதாரம்.

மிளகுப்பற்று கண்டால் 
தலைவலி ஓடும் 

மிளகுத் தூளும் 
உப்புத் தூளும் 
கலந்து பல் துலக்கி வர 

பல்வலி, ஈறுவலி, 
வாயில் துர்நாற்றம் 
எல்லாம் மறையும்.

மிளகு ரசம் என்றால்
சாதமும்
சத்தமில்லாமல் போகும்.

கண் திருஷ்டிக்கு
கண் கண்ட பொருள்.

ஊக்கம் பெறவும்
குறைகள் போக்கவும்...

விஷத்தை விரட்டும் 
மிளகு மருந்தாகும்

மிளகை நீ உண்டுவந்தால் 
பல நோய்க்கு தீர்வாகும். 
 
You might also like:

    சோற்றுக் கற்றாழை!


    சோற்றுக் கற்றாழை!
    இது ஒரு மருத்தவ நிவாரணி.

    இலைச்சாறுகளில் 
    ஆந்த்ரோகுயினோன்கள்இ
    ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘
    ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன.

    பெண்களுக்கு என்றும் ராணியாய்,
    வரம் தரும் அடுக்கு மடல் கொண்ட செடி.

    இது ஒருவகை இனிப்பு கூழ்,
    இது மூல நோய்க்கும்...

    வயிறுப் புண்ணுக்கும்
    இலையின் சாறு மருந்தாகும்.

    அழகுக்கு அழகுச் சேர்க்கும்.
    சோற்றுக் கற்றாழை,தாயகம்
    தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடாகும்.

    இதை நாடாமல் போனால்
    அரியசெடியை இழந்த நிலையாகும்.

    இதன் மருத்துவ குணம் ,அறிந்தும்
    இன்னும் நாம் வீட்டில் 
    பயிரிட மறுத்ததால்...

    இனியும் இல்லாமல் போனால்
    நமது இயலாமையைக் குறிக்கும்
    வரும் தலைமுறை சபிக்கும்.

    இளமைக்கு இது தேவை என்றால்
    இன்னுமா தயக்கம்!
    பயிரிட ஏனப்பா சுனக்கம்?

    இதன் மருத்துவம் ,பயன் தரும்.
    இளமை தரும்,சோற்றுக் கற்றாழை,
    நமக்கு என்றும் சொந்தம்
     
    You might also like:

      SUNDAY, OCTOBER 23, 2011

      பச்சைக்கறிகளை...


      தினம் தினம்
      காய்கறிகள் கலந்த உணவு,
      உண்டால் இல்லை,
      பின்விளைவு!

      முட்டைக் கோஸ்,
      காலி ஃபிளவர், கீரை
      உடலுக்கு தேவை

      உண்டுவந்தால் கிடைக்கும்
      டி சத்துக்கள்!
      ரத்தை உறையவைக்கும்
      இவைகள்!

      இல்லையென்றால் உத்திர
      போக்கு அல்லவா தொடரும்.


      பீன்ஸ், பட்டாணி,
      பச்சைக் காய்கறிகள்,
      வேண்டும்..!


      இதை சாப்பிட்டால் தான்
      சுண்ணாம்பு சத்துக்கு
      மனுப்போட முடியும்!


      ஆன்டி ஆக்ஸிடன்ட்
      நிறைந்த உணவு வேண்டும்
      என்றால் பச்சைக்கறிகளை...


      தெளிவுக் கொண்டு
      உண்ண பழகு,
      பளபளக்கும் உடல்
      கிடைக்கும் பாரு!


      புதினா, கொத்துமல்லி,
      கருவேப்பிலை, கீரைகள்
      காய்கறி விதைகளை
      விதைக்க நாடு!

      உன் வீட்டுக்கும்,
      உனக்கும் அழகு!
      என்பதை சொல்லும் 
      காய்கறியை உண்ண பழகு1
       
      You might also like:

        FRIDAY, MARCH 05, 2010

        தர்பூசணி பழத்தின் சிறப்பு!கவிதையோடு










        மனிதனுக்கும் பழத்துக்கும்
        ரத்த உறவுகள்...
        சத்து உறவுகள்...
        என உறவாட 
        உரிமைவுண்டு!


        இந்த தர்பூசணிக்கும் 
        இதில் பங்குண்டு.
        சிட்ருலின் என்னும்,
        சத்து பொருள் 
        இருப்பதைக் கண்டு ,
        உண்டால் பலனுண்டு 


        தர்பூசணி உண்டால் 
        சிட்ருலின்
        வேதியல் பொருளாய் 
        அர்ஜினைன் மாறும்.
        தன் வேலை செய்யும்.


        ரத்தத்தோடு கலந்து 
        நம் உறுப்புகளை 
        சுறுசுறுப்பு தந்திடும்.
        இன்னும் தர்பூசணி
        சுவைத் தந்திடும் 


        தர்பூசணி வெள்ளை 
        பகுதியோ 
        ஆண்மைக்கு அழகு 
        சேர்க்கும்!


        தர்பூசணியை...
        ருசித்துப் பார்த்தால் 
        உடலும் அறிந்திடும்!
        உண்மை புரிந்திடும்!




         

        THURSDAY, MARCH 04, 2010

        தக்காளி நீண்ட ஆயுளின் வழி!





        தக்காளி!
        தடையின்றி கிடைக்கும்,
        இதை சாப்பிட்டால்
        தடையின்றி ரத்தம் ஓடும்.

        ஆஸ்பிரின் மாத்திரையின்

        மறுஅவதாரம்.
        தினமும் உண்டால்
        பசியின்றி போகும்.

        குண்டுயாகாமல் உன்

        எடையை தடுக்கும்.
        முகம் அழகாகும்.


        அஜீரணத்துக்கு மருந்து.
        தக்காளி சாறு நீ அருந்து.

        தினம் உணவுவோடு,

        நீ சேர்த்துக் கொண்டு,
        நீண்ட ஆயுளை அதிகப்படுத்து.

         

        மருத்துவத்தின் உண்மை மாதுளை!




        மாதுளை!
        இனிப்பும்,புளிப்பும் ,
        கொண்ட வகைகள்,
        வலம் வருவதுண்டு!




        இனிப்பு மாதுளையோ,
        இதயத்திருக்கும்...
        மூலைக்கும்...
        ஆற்றலை தருவதில்
        அக்கரைவுண்டு!


        பித்தத்தை போக்கி
        இருமலை, நிறுத்திவிடுவதில்
        மாதுளை ஒரு அணிந்துரை!




        புளிப்பு மாதுளையோ...
        வயிற்றுக் கடுப்பு
        நீக்கி,
        இரத்த பேதியை
        நிறுத்தி,
        வயிற்றின் புண்ணை
        ஆற்றிவிடும்.


        தடைப்பட்ட சிறுநீரும்
        தடையின்றி வெளியேறும்.
        மாதுளம் விக்கலுக்கு
        விடை சொல்லும்!


        தாகம் தீர்க்கும்
        பானமாகும்,
        கோடைக்கு
        இதமாகும்.


        மாதுளை 
        தினம் அருந்திவந்தால் 
        உடம்பில் தோன்றும் 
        வெள்ளை படலத்தை 
        அகற்றும்!


        மாதுளை சாற்றில்
        கற்கண்டு கரைத்து குடித்தால்
        உஷ்ணம் உடலை விட்டு ஓடும்!


        புது உற்சாகம் தோன்றும்.
        மாதுளை சாற்றில்
        தேன் கலந்து குடித்தால்
        உடலில் மாற்றம் வரும்!
        சோம்மல் முறிந்து போகும்.


        மருத்துவத்தின் மாமருந்து 
        இந்த  மாதுளை!
        உண்டுப்பார்த்தால் 
        புரியும் உண்மை !


         

        FRIDAY, FEBRUARY 26, 2010

        முருங்கை கீரை அரும் மருந்தாகும்.



        முருங்கை கீரை
        அதன் மகத்துவம் 
        அறிவீரோ!

        தாது பலத்துக்கும்
        தூதுவாகும்.

        ரத்த அழுத்தமும்
        குணமாகும்!

        கொழுப்புகள் கூட
        கரைந்து போகும்.
        சக்கரை நோயும்
        குறைந்துபோகும்!

        கண் பார்வை தெளிவாகும்.
        நீ உணவாய் உண்டால்
        நலமாகும்!

        முருங்கை கீரை
        அரும் மருந்தாகும்.
        நம் வீட்டில்
        முருங்கை வளர்த்தால்,
        சில நோய்கள்
        பயந்து போகும்!

        இளகிய மரம்
        காற்றுக்கு இணங்கிடும்.
        நம் உடலுக்கு
        பலம் தரும்
        இதன் தந்திரம்.

        உடலுக்கு முறுக்கு
        தந்திடும் முருங்கை .
        உடல் முழுதும்
        பாய்ந்திடும் வேங்கை.


        இரவுக்கு இது இனிப்பு!
        இந்த முருங்கையே...
        ஆண்மைக்கு சிறப்பு!

         

        வெங்காயம் !





        என் பெயரை
        அடிக்கடி
        சொன்னவர் பெரியார்!


        என்னை பார்த்தல்
        எரிச்சல் உண்டாகி
        கண்ணீர் வரும்.
        இப்பினும் என்னை
        வெறுப்பவர் யாருமில்லை.

        நானில்லாமல்
        எந்த உணவும் ருசிப்பதில்லை.
        என்னை உரித்தால் ஒன்றுமில்லை.


        என்னை
        அறிந்தோருக்கு சுவையாவேன்!
        நானோ அணைப்புக்கு
        ஆண்மையாவேன்


         

        மாம்பழம்.



        எனது பூர்விகம் 
        இந்தியாதான்.
        முதலில் என்னை 
        புரிந்துக்கொள்ளுங்கள்!

        என்னை சூடு என
        ஒதிக்கி வைக்காதே!
        என் பலனை 
        அறிய மறவாதே!

        எனக்குள் இருப்பது
        ஏ,சி,வைட்டமிகள்
        தோலோடு உண்டால்
        ஓசியாக கிடைக்கும்,
        ஆரோகியங்கள்!


        என் கொட்டைகளில்
        கால்சியம் ,கொழுப்பும்
        இருப்பதை அறியுங்கள்.


        அல்போன்சா,பகனபள்ளி,
        ராஸ்புரி நீலம்,ஒட்டு
        மல்கோவா,என எனக்கு
        உடன்பிறப்புக்கள்.


        எங்களை ரசித்து 
        உண்ணுங்கள்

        இயற்கையாய் கிடைக்கும்
        சத்துக்களை சாப்பிட்டு
        பழகுங்கள்,
        உங்கள் உடலுக்கு உதவுங்கள்.


         

        முக்கனிகளில் ஒன்று பலா!





        முக்கனியில் ஒன்று
        இந்த பலா.

        பெண்ணின் இதழை விட
        சுவை இந்த பலா.

        மூளைக்கும் ,உடலுக்கும்
        பலம் சேர்க்கும் பலா .

        ரத்தத்தை விருத்தி
        செய்யும் இந்த பலா .

        முள்ளாயிருந்தாலும்
        சுவை தரும் பலா .

        எதிர்ப்பு சக்தி தரும்
        பழமாய் வலம் வரும்
        இந்த பலா!

        பழத்தில் பலா,
        இது ஒரு நிலா.


         

        வேர்கடலை.


        கடற்கரையில் ,
        டீக் கடையில் 
        கடலை போடும்
        காளைகளே!
        வேர்கடலையோடு
        கடலை போடுங்களே.

        கடைகளில் எளிதாக
        குறைந்த விலையில்
        கிடைக்கும் முட்டை இது.

        ஏழைக்கு சத்து தரும்
        வேர்கடலை இது!

        மண்ணுக்குள் முளைக்கும்
        ஏழை வைரமிது!

        முழு பலன் கொடுக்கும்
        கடலை இது!

        கால்சியம் ,இரும்பு
        வைட்டமின் ஈ நிறைந்த
        மருந்து இது.

        நம்ம காந்தி தாத்தா
        தினம் கொறித்தக் கடலைஇது
        நாமும் கொறித்தால்
        பலன் தரும் கடலை இது

         

        சூரிய குளியலின்



        சூரிய குளியலின்
        சூத்திரம் தெரியுமா ?

        விலைக்கொடுத்து
        வாங்கி சாப்பிடும்
        மாமிச உணவுகளிலும்,
        வயகரா மருந்துகளிலும்
        கிடைக்கும்...


        வாலிப விருந்துக்கு
        உண்டான விட்டமின்"டி"
        கிடைப்பதை அறிவிரா ?

        தண்ணிரில் குளிப்பது
        உன் உடலுக்கு ஆரோக்கியம்
        சூரிய குளியல்
        உன் உணர்வுக்கு விருந்தாகும்.

        யோக ,தியானம் ,
        சூரியநமஸ்காரம்,
        நமது பண்பாட்டில் ஒன்று.

        இதை தெரிந்து கொண்டு,
        செய்துவந்தால்,



        சூரியக் குளியல் 
        குளித்துவந்தால்...

        உணர்வுக்கும் இலவச 
        மின்சாராம்.

        உன் உடல் 
        உனக்கு.
        வசப்படும் 


         

        ஆப்பில் ஒரு பார்வை.



        ஆப்பில்!
        உலகத்தின்
        தோற்றத்திருக்கும்,
        ஐஸக் நியூட்டனுக்கு
        புவி ஈர்ப்பு சக்தியை
        அறிமுகம் செய்ததும்.
        இந்த ஆப்பில் தான்.

        தினம் ஒரு ஆப்பில்
        சாப்பிட்டால்
        உடலுக்கு நல்லது,
        உடலோ மருத்தவரை
        நாடாது.

        கர்ப்பக் காலத்தில்
        ஆப்பில் பெண்ணுக்கும்
        உகந்தது,சிறந்தது.

        ஆப்பில் தான்
        மனிதனின் பழகினத்தை
        உணர்த்திய முதல் பழம்
        ஆரோக்கியத்தின் அடித்தளம்.
        உலகின் அஸ்த்திவாரம்

         

        கருத்துகள் இல்லை:

        கருத்துரையிடுக