நன்றி கடன் ...சிரிக்க மட்டும்
என்ன தலைவர் பிச்சைக்காரர் மறுமலர்ச்சி
பேரணி என்று போகிறார் ?
வரும் தேர்தலுக்கு அவங்க தான்
நம்ம கட்சிக்கு பணஉதவி பண்றாங்க
அதுக்கு நன்றி கடன் தான் ...
==================================
தலைவருக்கு தான் சுகர்
அதுக்காக பேரணி என்ற பெயரில்
நம்மை நடக்க சொல்லுவது சரில்லை
================================
என்ன தலைவர் பிச்சைக்காரன்
கெட்டப்பில் இருக்கிறார் ?
அவர் ராசிக்கு இந்த தேர்தலை
பிச்சைகாரன் கெட்டப்பில்
நின்னாதான் வெற்றி பெறுவாராம்.
=============================
MONDAY, DECEMBER 05, 2011
பிளைட்டுல வராமல் ...சிரிக்க மட்டும்.
பஸ் ஏன் நிக்குது ?
அதுக்கு உட்கார தெரியாது
அது தானே ...
தப்புடா ..மரியாதை தெரிந்த பஸ்
அதனால் தான் நிக்குது...
========================
இருந்தாலும் ராமுக்கு பண திமிரு
அதிகம்...
எதை வைத்து சொல்லுறே ?
திருச்சிலிருந்து பிளைட்டுல
வராமல்
சென்னைக்கு பஸ்லே வரான் பாரு..
==========================
SUNDAY, DECEMBER 04, 2011
பஸ் பாஸ் இருக்கு...
காதலி :
என்னை காதலிக்க உன் கிட்ட
என்ன தகுதி இருக்கு?
காதலன் :
இலவச பஸ் பாஸ் இருக்கு
காதலி:
ஐ லவ் வு .
=========================
மனைவி:
மாப்பிள்ளை பற்றி விசாரித்தீர்களா ,
வசதி எல்லாம் எப்படி ?
கணவன் :
மாப்பிளை வேலைக்கு தினமும்
பஸ்ல போறார்
என்றால் பார்த்துக்க ...
மனைவி:
அப்ப பெரிய இடம் தான் உடனே முடிச்சிடுங்க
============================
SATURDAY, DECEMBER 03, 2011
போலி டாக்டரா இருப்பாரு போல
அப்படா ஒருவழியா
பத்து நோய்க்கு மருந்து எழுதி வாங்கி
வந்தாச்சு...
ஒரு மாதம் கவலை இல்லாமல்
வேலை பார்க்கலாம்...
=========================
நோயாளி:
இந்த டாக்டரை பார்த்தால்
போலி டாக்டரா இருப்பாரு போல
தெரிகிறது...
எப்படி ?
நோயாளி:
மருந்து எழுதும் போது
வேற டாக்டர் சீட்டை பார்த்து
பார்த்து எழுதுகிறார்...
FRIDAY, DECEMBER 02, 2011
ஜெயிலில் இருப்பீங்க.
ஜோதிடர் :
உங்கள் தலைஎழுத்து தலைப்பாய்
மாறும்
பார்ப்பவர் :
அப்படியா ?
ஜோதிடர் :
உங்கள் ரேகை போற இடம்
திகார் ஜெயிலா தெரிகிறது..
இனிமே நீங்க தான்
தலைப்பு செய்தி...
===========================
அரசியல்வாதி :
வருங்காலத்தில் எப்படி இருப்பேன் ?
ஜோதிடர்:
கட்டம் போட்ட சட்டை
அரைக்கால் டவுசரோடு
ஜெயிலில் இருப்பீங்க.
அரசியல்வாதி :
வடிவேலு கலாட்டா
மன்னிக்கணும்
நான் இன்று முதல்
ஐந்து வருடத்துக்கு
அதிமுகவில நடிக்கப்போகிறேன்.
எப்போதும் போல என் பேச்சை
செய்யலை சிரிக்க மட்டும்
எடுத்துக் கொள்க...
அரசியலாக்க வேண்டாம்
=========================
வடிவேலு:வாங்க நிருபரே நலமா?
நிருபர்:
நலமிருக்கட்டும்
என்ன நீங்கள் அதிமுகவில்
சேர போவதாக
வதந்தி வருதே...?
வடிவேலு:
இன்னும் அம்மாகிட்ட இருந்து
தந்தி வரவில்லை அதுக்குள்ளே
வதந்தி வந்து விட்டதா ?
நிருபர்:
அப்ப தேர்தலில் பேசியது எல்லாம் ...
வடிவேலு:
அது நார வாய்
இது வேற வாய்..!
நிருபர்:
கோமாளி வேஷத்தில்
என்ன டாகடர் கோமாளி வேஷத்தில் போகிறார்
பார் டைமா சர்க்கஸ்லே டாகடர் வேலை பார்க்கிறார்
அங்கு வேலையை முடித்து நேரா இங்கு வருகிறார்.
============================
வந்தவர்:
டாகடர் என்ன ஜோக்கர் வேடத்தில் வேலை பார்க்கிறார்.
நர்ஸ் :
குழந்தைகள் டாகடர் இப்படி தான் இருப்பார்.
=========================
THURSDAY, DECEMBER 01, 2011
இனி ஓசில ஏசி தான்
நோயாளி:
எனக்கு தான் ஒண்ணுமில்லே என்று
டாக்டர் சொல்லிவிட்டாரே
அப்புறம் எதுக்கு டெஸ்ட் ?
நர்ஸ்:
டாக்டருக்கு ஒன்றும் தெரியாது
எங்க ஜிஎம் க்கு தான் தெரியும்
உங்கள் பர்சைப் பத்தி...
==========================
நோயாளி :
என்னை எங்கே கொண்டு போறிங்க?
நர்ஸ்:
டாக்டர்
நீங்கள் பணம் தராததால் உங்களை
பிணக் கிடங்கில் வைக்க சொல்கிறார்;
நோயாளி :
அப்ப சரி 24 மணிநேரமும் இனி ஓசில ஏசி தான்
நர்ஸ் :
TUESDAY, NOVEMBER 29, 2011
சனிஸ் டிஸ்ஸா மாற்றிவிடு...
சர்வர்:
முதலாளி சாம்பாரில் பாச்சை விழுந்து போச்சு என்ன செய்ய ?
முதலாளி:
சனிஸ் டிஸ்ஸா மாற்றிவிடு...
===============================
சர்வர் இன்று என்ன ஸ்பெஷல்?
சர்வர்:
இன்று எல்லாமே ஸ்பெஷல் தான்
எங்க சமையல்காரர் லீவு
============================
SUNDAY, NOVEMBER 27, 2011
கடி ஜோக் கடித்துவிட்டது...
டாக்டர் :
என்ன வாயெல்லாம் ரத்தம்...
நோயாளி:
உங்கள் கடி ஜோக் தான்
கடித்துவிட்டது...
================
நோயாளி :
பல்லுல ஓட்டை
டாக்டர்:
சிமென்ட் வைத்து அடைத்துவிடலாம்.
நோயாளி :
சிமென்ட் வைத்து அடைக்க நீங்க ஏன்
கொத்தனாரே போதுமே...
=================
நோயாளி :
இது என் அப்பா பல் செட்
என் வாய்க்கு தகுந்த மாதிரி ஆல்டர் பண்ணி
தாங்க..
டாகடர்:
அது மாதிரி செய்யமுடியாது .
நோயாளி :
போனவாரம் எங்க அப்பா பெரிய
சட்டையே
டைலர் ஆல்டர் பண்ணிதந்தாரே
இந்த சின்ன பல் செட்டை செய்யமுடியாதா ?
டாக்டர்:
SATURDAY, NOVEMBER 26, 2011
முட்டைக்கு ஏக கிராக்கி...சிரிக்க மட்டும்
வாத்தியார்:
இது என்னடா எல்லா பேப்பரிலும்
கடைசியா ஒரு வரி
லாலாக் கடை முட்டை சாப்பிடுங்க
பேப்பரை திருத்துங்க என்று இருக்கு...
மாணவன் :
லாலா முட்டை கடை எங்களுடையது
சும்மா விளம்பரத்துக்கு தான் சார்.
=============================
அப்பா :
டேய் இங்கே வா ,இது என்ன எல்லா பரிச்சையிலும்
சைபர் வாங்கி இருக்காய்?
மகன் :
அது சைபர் இல்லப்பா நம்மக் கடை முட்டை விளம்பரம்
அதை தான் இப்படி வாத்தியார் போட்டுயிருக்கார்..
================================
என்ன சார் முட்டைக் கடை ஓனரை போலிஸ் கைது பண்ணுது
நேற்று சின்ன பையன் அரசியல்வாதியை அடித்ததை
தனக்கு சாதகமாய் வதந்தியை பரப்பிவிட்டார்...
எப்படி ?
எங்க கடை முட்டை குடித்து தான் சின்ன பையன் அரசியல்வாதியை
அடித்தான் என்று சொல்லவும் அவர் கடை முட்டைக்கு ஏக
கிராக்கியா போச்சு...
TUESDAY, NOVEMBER 22, 2011
அடி தாங்குவேன்... சிரிக்க மட்டும்
மாமியார்
உங்களுக்கு மானம் சூடு சொரணை
பற்றி தெரியுமா ?
மாப்பிளை:
அப்படி என்றால் .
மாமியார்
அப்ப நீங்க தான் என் மகளுக்கு
மாப்பிள்ளை .
=======================================
மாமியார்:
என் மகளை கலியாணம் பண்ண என்ன தகுதி
இருக்கு உன்னிடம்?
மாப்பிளை :
எவ்வளவு அடித்தாலும் அடி தாங்குவேன்
வலிக்குது என்று சொல்லவே மாட்டேன்
நீங்கள் நம்பலாம் என்னை.
======================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
திட்டுறதே கேக்காதே...சிரிக்க மட்டும்.
உன் மனைவி இப்படி திட்டுறாங்க உனக்கு
கோபமே வராதா ?
என்னை திட்டும் போதுஎல்லாம் காதை
விரலால் அடைத்துவிடுவேன்,திட்டுறதே
கேக்காதே...
====================================
கணவன்
நீ என் மனைவி உன் புடவையை துவைக்கிறேன்
சரி உங்க அம்மா புடவையும் துவை என்றால்
என்னால் முடியாது ...
மனைவி:
எனக்கு நீங்க தாலிக் கட்டிருந்தாலும்
பணம் கொடுத்து வாங்கியது எங்க அம்மாதான்
அவங்க புடவையும் துவைக்கணும் தான் .
MONDAY, NOVEMBER 21, 2011
தொலைக்காட்சி தினம் (சிரிக்க மட்டும்)
கணவன்:
என்னடி தொலைக்காட்சிக்கு பூவு எல்லாம் வைத்து இருக்காய்
கேக்கு வேற இருக்கு யாருக்கு பிறந்த நாள்?
மனைவி:
இன்று தொலைக்காட்சி தினம் அதுக்கு தான் இந்த கொண்டாட்டம்.
=============================
பெண்கள் தினத்தை
பெண்கள் எல்லாம் சேர்ந்து பெரிய விழாவா
கொண்டாடுவதை பார்த்தால் சந்தோஷமா இருக்கு .
அட நீங்க புரியாத ஆளுப்பா .
தொலைக்காட்சி தினமா இன்று
அதுக்கு தான் இந்த ஆர்பாட்டம் ....
==============================
என்னது இன்று தொலைகாட்சி தினமாய் இருப்பதால்
தொலைக்காட்சி நிலையங்கள் விடுமுறையா ?
ஆமாடி ...
இப்படி விடுமுறை விட்டா தொடரை எப்படி
பார்க்காமல் இருப்பது ,இதுக்கு எல்லாம்
போராடனும் ஆமா ...
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
SUNDAY, NOVEMBER 20, 2011
பயந்தான்கொள்ளி குடும்பம்...சிரிக்க மட்டும்
காதலன்:
நம்ம காதல் ஜெயிக்கனும் என்றால்
நாம ஓடிபோய்தான் கல்யாணம் செய்துக்கணும்.
காதலி:
நான் எத்தனை தடவை தான் இப்படி ஓடுவது?
காதலன்
?????????????????
==================================
காதலி :
வா நாமா ஓடிபோயிவிடலாம்
காதலன் :
எனக்கு பயமா இருக்கு
காதலி :
இப்படி தான் உன் அண்ணனும் பயந்தான்
இப்ப நீ ...
சரியான பயந்தான்கொள்ளி குடும்பம்
======================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
இனி சைக்கிள் பயணம் தான்....
பொது மக்கள்
சைக்கிள் இலவசமா கொடுத்தப்பவே தெரியும்
எதுக்கு சொல்றே
பஸ் கட்டண உயர்வு ,பெட்ரோல் உயர்வு
இப்படியே போனால் இனி சைக்கிள் பயணம் தான்
========================================
தொண்டன் 1
என்ன வீட்டுக்கு வீடு கார் இலவசமா தருவோம் என்று
சொல்லியும் வெற்றி பெற முடிய வில்லை...
தொண்டன்2
பெட்ரோல் விக்கிற விலைக்கு கார் சும்மா கொடுத்தாலும்
வாங்க மாட்டார்களாம்
தொண்டன் 1
இனி சைக்கிள் தான் வேண்டுமாம் .அது விக்கிற விலைக்கு
இலவசமா கொடுக்க முடிவுமா நம்மால் ?
====================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கொஞ்சம் கடி ,சிரி...
தலைவர் அடிகடி கிளி ஜோசியம் பார்க்கிறார் எதுக்கு?
நில அபகரிப்பு ஊழலில் தனக்கு எப்ப அரசு வாரன்ட்
வரும் என்று பார்க்கிறார்
++++++++++++++++++++++++++++++++++++++
கிளிக்கு ரக்கை முளைத்த்துடுத்து ஆத்தவிட்டே போச்சு என்று
ஏனப்பா புலம்புகிறார் தலைவர் ?
அரசிலுக்கு வரும் முன், தலவைர் கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டு
இருந்தார் ,அவர் வளர்த்த கிளி தான் இப்ப பறந்து போச்சாம்
அதை தான் சொல்கிறார் .
=====================++++++++++++++++++++==============
SATURDAY, NOVEMBER 19, 2011
ஞாபக மறதிக்கும், மறதிக்கும்...
யாருடி இது புதுசா வேலைக்காரன்?
பக்கத்துக்கு வீடு இவருக்கு ஞாபக மறதிகாரர்
காமன் பாத்ரூம் என்பதால்
அவர் பொண்டாட்டி புடவை என்று எண்ணி
என்னுடைய புடவையும் துவைத்து
காயவைத்துவிட்டு போவார் ...
அடிப்பாவி,பார்த்து இரு அப்பறம் ...
=================================================
என் கணவருக்கு ஞாபக மறதி இருப்பது
எனக்கு வசதியா போச்சு.
பழைய காலண்டரை வைத்து தீபாவளி
பொங்கல் வருதுஎன்று சொல்லி புடவை வாங்கிவிடுவேன்.
=============================================
அரசியல்வாதி:ஞாபக மறதிக்கும், மறதிக்கும் என்ன
வேறுபாடு டாகடர்?
டாகடர்:நீங்கள் தெரியாம நல்லது செய்தால் ஞாபக மறதி.
நீங்கள் எனக்கு பணம் கொடுத்துவிட்டு போனால் மறதி.
==========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
ஞாபக மறதி இருக்கா
டாக்கடர்:ஞாபக மறதி இருக்கா உங்களுக்கு
நோயாளி:உங்கள் எப்படி தெரியும் ?
டாக்கடர்: வெட்டினரி கினிக்கு வந்தால் தெரியாத என்ன .
===============================================
நோயாளி :என்ன டாக்கடர் கேக்கு கொடுத்து
விட்டு போகிறார் எனக்கு பிறந்த நாள் இன்று இல்லையே!
நர்ஸ்:டாக்கடர் பண்ணிய ஆபரேஷனில் பிழைத்த
முத்த பெசன்ட் நீங்க தான் அதுக்கு தான்
பிறந்த நாள் கேக்கு கொடுத்துவிட்டு போகிறார்.
==============================================
நர்ஸ்
டாக்க்டருக்கு ஞாபக மறதி இருந்ததால் நீங்க உயிரோடு
இருக்கிறாய்.
நோயாளி:எனனது ?
நர்ஸ்:தப்பாவே ஆபரேஷன் பண்ணும் டாக்டர் நேற்று
ஞாபக மறதியாலே உங்களுக்கு சரியா பண்ணிவிட்டார்
அவருக்கே தெரியாமல்.
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
WEDNESDAY, NOVEMBER 16, 2011
வேலைக்காரன் வேண்டும்(சிரிக்க மட்டும்)
கணவன்:நான் செத்து போனா நீ என்ன பண்ணுவே ?
மனைவி :நானும் செத்து போவேன் .
கணவன் :என்னை அங்கே கூட நிம்மதியா இருக்க விடமாட்டியா ?
======================================================
மனைவி:வீட்டுக்கு நல்ல வேலைக்காரன் வேண்டும் பாருங்கள்
கணவன்:நாம மகளுக்கு சிக்கீரம் கல்யாணம் செய்துவிட்டால்
போகுது...
====================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
மனைவி:வீட்டுக்கு நல்ல வேலைக்காரன் வேண்டும் பாருங்கள்
கணவன்:நாம மகளுக்கு சிக்கீரம் கல்யாணம் செய்துவிட்டால்
போகுது...
====================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக