ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஓதியுணர்ந்து பாரடா!


ஓதியுணர்ந்து பாரடா!



சோதியுள்ள மனிதனே
சாதியற்ற மனிதனே
ஆதியற்ற உன்னையே
ஓதியுணர்ந்து பாரடா!

வீதியிலே நீயுமா
வீணன் உலாவலாம்..?
சோதி சூழ்ந்த வைரமும்
சகதி சூழ்ந்திருப்பதா...?

ஆக்கைக்குள் நீயுமே
அடங்கிவிட்ட பொருளல்ல
காக்கை குருவிகள் கூட
முடங்கவில்லை உனைப்போல!

யாரந்த இறைவன்..?
எவ்வாறு ஆனது உலகு..?
எப்படி அதில் நீ..?
பிறப்பின் இறப்பின் முன்பின் யாதோ..?

ஏதேதோ மதங்கள் பூமியில் ஏன்..?
ஆயிரம் சட்டங்கள் நியதிகள் ஏன்..?
ஆதலால் மனிதன் அடைந்தது யாது..?
பூதலம் மீதினில் நிகழ்பவை யாது..?

உண்மையும் பொய்மையும் இறைவனின் பெயரால்
நன்மையும் தீமையும் அவனைச் சொல்லி
நாளும் பொழுதும் அவனே சிந்தனை
யாரையும் செய்வான் அவனால் நிந்தனை
வேதனைகள், வினோதங்கள் எல்லாம் இதற்குள்..!

மேற்படி யாவும் இதுநாள் வரையும்
உட்புகுந்ததும் உண்டோ மானிடா
உன் மூளைக்குள்ளே..?

-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக