எழுதிக்
கொண்டிருக்கும் காகிதத்தில்
எங்கிருந்தோ
வந்து
விழும்
மழையின்
ஒற்றைத் துளி நீர்
சிந்தி
நான் வாழ்ந்துக்
கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
எங்கிருந்தோ
வந்த உன் ஒரு
துளி
நினைவால் கரைந்துவிடுகிறதடி
நினைவால் கரைந்துவிடுகிறதடி
என்
எண்ணங்கள்...
காகிதத்தை
பார்ப்பவர்களுக்கு
கரைந்துவிட்ட
எழுத்துக்கள்
பளிச்செனத்தெரிவதுப்
போல்
என்னைப்
பார்ப்பவர்களுக்கு
நீ கரைத்துவிட்டுப்
போன
என் எண்ணங்கள்
தானடி
பளிச்செனத்
தெரிகிறது
எப்படி மறைப்பது
பெண்ணே!
உன் நினைவுகளால்
கரைந்த
என எண்ணங்களை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக