செவ்வாய், 6 டிசம்பர், 2011

திரைவிமர்சனம் : மயக்கமென்ன ரசிக்கயென்ன...?


  
ஓட ஒட ஓட நேரம் போகலை
பாக்க பாக்க பாக்க படம் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல

தெருவோரப் புகைப்படக் கலைஞன் தன் வாழ்க்கையினுள்ளே ஒரு பெண் வந்தவுடன் உலகம் போற்றும் ஒருப் புகைப்படக் கலைஞனாகிறான். இது தான் கதையின் கரு. 50 ஓவரில் 150 தான் இலக்கு. அதை அடிக்க என்னென்ன மொக்கைப் போட முடியுமோ அத்தனையும் போட்டு கடைசி பந்தில் சிக்சர் அடித்துவிட்டு பல்லைக் காட்டுகிறது படம்.

     இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேறு எதாவது இருக்குமென்றால் குப்பை என்று சொல்லலாம். அந்த குப்பையில் பளிச்சென மின்னும் வைரங்களாக தனுஷ், ஒளிப்பதிவு, வசனங்கள்,இசை,பாடல்கள்.மேலும் வைரம் போல் சில இடங்களில் மட்டும் மினுமினுக்கும் கண்ணாடி ரிச்சா.
     மற்றபடி இந்த குப்பையை கிளர கிளர தேடினாலும் அகப்படவில்லை எனக்குக் கதை. ஒரு வேளை யாருக்கேனும் அகப்பட்டால் எனக்குச் சொல்லுங்கள். காதல் கொண்டேனிலும், புதுப்பேட்டையிலும் செல்வராகவனால் தனுஷ் என்று சொல்ல வைத்த அவரின் இயக்கம். இந்தப் படத்தில் தலைகீழ்.
     இந்தப் படம் ஓடினால் அது தனுஷிற்காக மட்டுமே தான் இருக்க முடியும். அதுவும் சந்தேகமாகத் தான் இருக்கிறது.
     கதையை காட்சிகளில் அருமையாக சொல்லக் கூடிய இயக்குனர் என்று பெயர் பெற்றவர். ஒரு புகைப்படக் கலைஞனின் அறிமுகத்தை வசனத்தில் சொல்வது கற்பனைக் குறைபாடு. எப்படியெல்லாம் ஒரு புகைப்படக்கலைஞனை அறிமுகம் செய்யலாம். அதை விட்டு தனுஷே தன் வாயால் சொல்வது, கதைக்காக இயக்குனர் மெனக்கெடவில்லை எனபதைத் தான் காட்டுகிறது.
     இந்த படத்தில் ஒரே ஆறுதல் என்று வெளியில் வந்தவர்கள் சொன்னார்கள். செல்வராகவனின் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக படத்தில் சென்சார் காட்சிகள் இல்லையாம். 

அடிடா அவனை வெட்றா அவனை ஒண்ணுமே இல்லை இப்படி இந்த பாடலை திருப்பிப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக