செவ்வாய், 6 டிசம்பர், 2011

வானவில்


வானவில்



சூரியன் ஓய்வு 
எடுக்கும் 
தருணம் 


மாலை 
நேரம் பார்த்து 
மேகக் கருத்த 
கூட்டத்தின் 
இடிபாடுக்
கிடையில் 


எழுத்துக்கள் 
இல்லாத 
புதுக் கவிதை
ஒன்று...

வானத்தில் 
பல வண்ணத்தில் 
வாசிக்கப்பட்டது...
 
You might also like:

    FRIDAY, DECEMBER 02, 2011

    நிம்மதியாய்...


    சூரியனை விரட்டிய 
    மகிழ்ச்சியில் 
    வெண்ணிலவின் 
    வெள்ளோட்டம்.


    ஊரின் 
    அமைதியை 
    தடுக்க 
    தெரு நாய்கள் 
    கொலைத்தது


    நேற்று பெய்த 
    மழையில் 
    தேங்கிய நீரில் 
    தவளையின் 
    சத்தம்...


    ஆங்காங்கே 
    பெய்த மழையில் 
    முளைக்க துடிக்க 
    அரும்பிய செடிகள்...


    இரவு தேநீர் 
    கடைகளில் 
    தேநீர் 
    அருந்தியப்படி 
    சிலரும்...


    திரைப்படம் பார்த்து 
    விமர்சித்த வண்ணமாய் 
    சிலரும்...


    தனது பணியை 
    செய்ய தூக்கம் 
    தொலைத்த 
    காவல் துறைகளும்
    இரோடு 
    இணைத்துக்கொள்ள...


    இதையெல்லாம் 
    அறியாமலும் 
    எண்ணாத நிலையில்;


    வேலையின் 
    களைப்பில் 
    ஏழைகளும்...
    உண்ட களைப்பில் 
    பணக்காரனும்...
    குடித்த போதையில் 
    குடிகாரனும் 


    அணு தினம் 
    பாதிப்பு 
    இல்லாத பாதையில் 
    பயணித்தால் 
    நிம்மதியாய் 
    தூங்கிதான் 
    போகிறார்கள்
    மனிதர்கள்...
     
    You might also like:

      THURSDAY, DECEMBER 01, 2011

      மரமில்லாமல் வாடிப் போகுது!


      காளை மாட்டை வண்டியில் பூட்டி 
      மாட்டின் கழுத்தில் சலங்கை மாட்டி 
      நாளும்
      இசையோடு போனது ஒரு காலம்

      அந்த நினைவுகள் 
      மறையாது ஒருக்காலம்!

      எங்கள் தாத்தா 

      வண்டி ஓட்டிப் போகையிலே
      சாட்டையை எடுத்து இடுவார் 
      ஓடும் சக்கரத்திலே 
      புதுச சந்தம்
      தொடுப்பார் கடகடஎன்று 

      வரும் சத்தத்திலே
      காளைகள் இரண்டும் 
      சீறிப்பாயும் நடுச் சாலையிலே!

      அந்தக் காலங்கள் 

      எல்லாம் இறந்து போனது
      தோட்டமும்,மாட்டு தொழுவமும் 
      அழிந்து போனது
      இருந்த இடத்தில் யெல்லாம் 
      அடுக்குமாடி அடைத்துக்கொண்டது
      நல்லக் காற்றுக் கூட 

      மரமில்லாமல்   வாடிப் போகுது!
       
      You might also like:

        SUNDAY, NOVEMBER 27, 2011

        மல்லிகை...


        மனிதர்கள் 
        தன் ஆசைக்கு 
        பறித்து வந்து 
        கட்டி வைத்து 
        அழகு பார்த்து 
        கசக்கி எறிந்தனர்
        ஆசைகள் 
        அடங்கியவுடன் 


        வாடிய மலராய்
        நிறமாறி 
        இறக்கும் முன் ...
        மல்லிகை 
        கதறி அழுதது...
         
        You might also like:

          FRIDAY, NOVEMBER 25, 2011

          பொறுமை...



          பொறுமைக்கு 
          வலு  சேர்க்கும் 
          பெருமை...

          தோல்வியில் 
          பொறுமை 
          வெற்றிக்கு 
          அணிச்சேர்க்கும் 

          வறுமையிலும் 
          பொறுமை
          வாழ்க்கைக்கு 
          வலிமை சேர்க்கும்.

          இழப்பிலும் 
          பொறுமை,
          அமைதிப் படுத்தும்...

          அகிலத்தை 
          ஆழ பொறுமையே
          ஆணிவேராகும்
          நல் வழியாகும்...

          பொறுமையே 
          இறைவனுக்கு 
          விருப்பம் 

          பொறுமைக்கு 
          மறு பெயர் தாய்மை,

          பொறுமை 
          இந்த தாய்மைக்கு..
          தலையாட்டும்
          தலைவணங்கும்....
           
          You might also like:

            THURSDAY, NOVEMBER 24, 2011

            பொய்கள்...




            வித விதமான பொய்கள்
            வீடுக்கு வீடு பேசப்படும்.


            தெருவுக்கு தெரு
            உண்மையாய் 
            வாசிக்கப்படும் 

            காதலில் 
            கவிதையாய் 
            நேசிக்கப்படும் 

            நீ அழகானவள் 
            என்று சொல்லியே 
            காதலிக்கப்படும் 

            விடுமுறைக்காக 
            அலுவலகத்தில் 
            முன்னுரைக்கப்படும்...

            பொய்கள் கூட 
            சில சமயம்
            ரசிக்கப்படும்.

            பொய்கள் கூடி 
            பொதுக்கூட்டம் 
            நடத்தப்படும்...

            அதிக பொய்களே 
            ஆட்சிக்கு அழைக்கப்படும் 

            காலத்துக்கு ஏற்ற பொய்கள்
            பேசப்படும்
            புதிய வகையில்
            சுவைக்கப்படும் 
            சுவாசிக்கபடும்

            பொய்கள் 
            உருமாறி
            மெய்யாய்
            பிறக்கப்படும்...
             
            You might also like:

              WEDNESDAY, NOVEMBER 23, 2011

              இரவு...



              பகலை மறைத்து 
              நிலவாய் அவதரித்து
              உறவுக்கு பாலமாய்
              இனிமைக்கு பலமாய்
              இந்த இனிய இரவு...

              பூமியின் ஒரு பகுதி
              பகலின் விழ்ச்சியோடு
              நிலவின் ஆட்சி 
              இரவாய் மாறி 
              அழகுக்கு சாட்சி

              அமைதிக்கு 
              அடித்தளம்
              தனிமைக் குதிரை 
              ஆசைகளை 
              அணைத்துக்கொண்டு
              அனைத்தும் 
              அடங்கிப்போகும் ...

              அழகின் அரசி 
              அன்பாய் பேசி 
              இரவு இவளை 
              இரவல் வாங்கினால்
              மகிழ்ச்சி.
               
              You might also like:

                TUESDAY, NOVEMBER 22, 2011

                நட்பு கவிதையில்!





                நேற்றும் இன்றும் 
                என்னோடு 
                நாளை கடந்தாலும் 
                கடத்தினாலும் 
                உள்ளத்தோடு 
                உலாவும் நினைவோடு 
                வருவான் என் 
                நண்பன் அன்போடு...

                கருத்து பிழை வந்தாலும்,
                இலக்கணம் மாறது
                எழுத்து பிழை வந்தாலும்
                எண்ணங்கள் குறையாது,
                திருக்குறள் போல
                இரு வரியாய்...
                சேர்ந்தே இருப்போம்
                எங்கள் நட்பு கவிதையில்!
                ===============================
                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                 
                You might also like:

                  சிற்பி எழுதிய கவிதை...





                  நம்பிக்கை தந்த வேளை
                  நம்பி செய்த வேலை

                  பெறுமை சொல்லும் வழியை 
                  பொறுப்புடன் செய்த நிலையை 

                  பெருமை கொள்ளும் கலையை
                  முட்டை தந்த அழகை

                  புதுமை, செழுமை என்றே 
                  பார்த்தாலே சொல்லுவோம் அருமை

                  கைகள் படைத்த திறமை 
                  கண்ணை பறிக்கும் சிலையை
                   
                  உடையாமல் செய்த மகிமை
                  இது சிற்பி எழுதிய கவிதை


                  ================================
                  உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                   
                  You might also like:

                    யாரும் அறியாமலே ...




                    இறைவன் 
                    தந்த உயிருக்கு 
                    நன்றி மறந்தான் 
                    மனிதன் 


                    வேலையோடு 
                    ஒதுங்கிப்  போனது 
                    வணக்கம் 


                    இரவில் தான் 
                    இறைவன் 
                    எண்ணம் வந்தது 



                    இருந்தாலும் 
                    தொடர்ந்தான் 
                    இறைவன் 

                    நல்ல நாளை
                    தந்தான் 
                    மறைவானவன் 


                    அவனவன் 
                    உள்ளத்தில் 
                    இருக்கிறான் 
                    இறைவன் 


                    உதவி செய்த வண்ணம் 
                    யாரும் அறியாமலே 
                    ==========================

                    கஸல் பார்வையில் கவிதை 

                    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                     
                    You might also like:

                      MONDAY, NOVEMBER 21, 2011

                      சென்ரியூ நகைப்பாக்கள் ...







                      வாக்குறுதிகள் 
                      விதி மீறிய செயலில் 
                      விலைவாசி உயர்வு 
                      ==================


                      விடிய விடிய 
                      பேசியத்தில்
                      கூட்டம் 
                      செய்தக் குற்றத்தை 
                      மறந்தன.
                      =====================


                      மேடையில் பேச்சுக்கள் 
                      நன்றாக நடித்தன 
                      தேர்தல் நேரத்தில் 
                      =====================
                      சென்ரியூ நகைப்பாக்கள் ஒரு பார்வை
                      ============================
                      உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                       
                      You might also like:

                        எழுத்து பிழையில்





                        பொறாமையுடன் 
                        அடுத்த வீட்டை பார்த்தேன் 
                        என் வீட்டின் 
                        இனிமைகளை காட்டினான்.
                        இறைவன்.


                        இறைவன் எழுதிய 
                        கவிதை மனிதன் 
                        மனிதனோ இன்று 
                        எழுத்து பிழையில்


                        நம்பிக்கை அற்றவனும் 
                        அவதிப் படும்போது 
                        சொல்கிறான் 
                        அட கடவுளே...
                        ====================
                        கஸல் பார்வையில் கவிதை ...++++++++++++++++++++++


                        உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                         
                        You might also like:

                          SATURDAY, NOVEMBER 19, 2011

                          தணிக்கை அற்ற






                          பகலில் பேசி 
                          இரவின் 
                          அழகியில் 
                          தொலைத்தால் 
                          கிடைக்கும் 
                          இல் வாழ்க்கை 



                          மலரும் மலராய் 
                          அணு தினம் 
                          நீ மாறினால் 
                          வாசம் வீசும் 
                          வாழ்க்கை...


                          மனங்கள் ஒன்றாய் 
                          தணிக்கை அற்ற 
                          வாழ்க்கையே...


                          இல்லறத்தில் 
                          இருவருக்கும் 
                          இனிமையாய் 
                          இன்பமாய் என்றும் ...


                          ======================================
                          உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                           
                          You might also like:

                            சொல் ...



                            இரவை ரசிக்கமுடியவில்லை ,
                            நிலவை பிடிக்கவில்லை.

                            பகலை பார்க்க மனமில்லை
                            மலரை சூட மனம் நாடவில்லை

                            காதலனாய் உன்னை நினைத்தபின்
                            எதுவும் ரசிக்கமுடியவில்லை .

                            இது தான் காதலா
                            சொல்ல இன்னும் தாமதமா

                            உன் வருகைக்காக
                            துடிக்கிறேன்
                            துடிக்கவைப்பதில்
                            ஆணுக்கு சுகமா!
                            நீயும் அந்த ரகமா?

                            ஏன் மௌனமாய்
                            மொழி பேசுகிறாய்...
                            செம்மொழி அறிதேவனே!



                            சொல் ஒரு முறை
                            காதல் மொழியில்
                            கவிதையாய் ...


                            நீயும் காதல் வசப்பட்டது
                            உண்மை என்று ...
                            சொல் காதலிப்பதாய் 

                            காதல் பதிலறிய
                            காதலோடு காத்திருக்கும்
                            காதலி.

                            ======================================


                            உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                             
                            You might also like:

                              THURSDAY, NOVEMBER 17, 2011

                              மழை...



                              இடிகளின் சத்தம் 
                              மின்னல் இமைக்க 
                              பயத்தோடு 
                              மேகங்கள் 
                              அழுதது.
                              ===================================================================


                              உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                               
                              You might also like:

                                WEDNESDAY, NOVEMBER 16, 2011

                                மலர்கள் மறுபிறவி...

                                மலருக்குள் 
                                சிந்திய பனித்துளி 
                                விதைக்குள் 
                                விழுந்து உறவாய்
                                உறவாட ...






                                மயக்கும் மலர்கள் 
                                புதுப்பிறவி...







                                வண்டுக்கும் 
                                தேனீக்கும் 
                                காதலியாய் 


                                என் காதலி 
                                காரிகைக்கு 
                                அழகிய 
                                தோழியாய் 


                                புதிய பொலிவோடு
                                மலர்கள் மறுபிறவி... 


                                ======================================


                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                அழகிய தீயாய்...



                                அகலுக்குள் 
                                எண்ணத்தை ஊற்றி 
                                திரிக்குள் 
                                இன்பத்தை நனைத்து 
                                காமத் தீ எரியவே 
                                ஒளியாய் 
                                ஜனனம்...

                                இருளுக்குள் 
                                ஒளிக் கதிர்கள் 
                                தீண்ட 
                                எல்லாம் அறிய 
                                இந்த அகலே 
                                அழகிய தீயாய்...

                                ============================

                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                MONDAY, NOVEMBER 14, 2011

                                குளிர் நிலவு...



                                அதிகாலை 
                                சோம்பலை முறித்து 
                                கடலில் குளித்து 
                                எழுந்த சூரியன்...


                                கைக்குட்டையாய்
                                மாறி...


                                ரோஜா மலருக்கு
                                பனி தந்த முத்தத்தின் 
                                ஈரத்தை துடைத்து 
                                தனது பயணத்தை 
                                தொடர...


                                உலகத்தின் அவலத்தை 
                                கண்டு 

                                சினம் கொண்ட 
                                கதிரவன் 

                                வெப்பக் கடிதத்தை 
                                வாசிக்க...


                                மக்கள் அவதியை 
                                அறிந்து 


                                பூமியின் அழைப்புக்கு 
                                மாலை உறவாய்
                                உரு மாற...


                                பிறந்தாள்
                                குளிர் நிலவு...


                                கதிரவன் வெளிச்சத்தை 
                                கடன்வாங்கி 


                                புது உறவுக்கு 
                                தூது சொல்ல...




                                ============================



                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                மெழுகுவர்த்தி




                                ஒற்றைக்காலில் ஆடும் 
                                நாட்டியம்.
                                இருளுக்கு ஒளித் தரும் 
                                அஞ்சலி
                                தன்னம்பிக்கை சொல்லும் 
                                ஒளிப்பாடம்.
                                தீக்குள் உறவாகி கருவாகும் 
                                வெளிச்சம்...
                                வாழ்க்கைக்கு 
                                நம்பிக்கை நட்சத்திரம்.

                                ============================================


                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                SUNDAY, NOVEMBER 13, 2011

                                நிழலே தாஜ்மஹால்!



                                காலம் கடந்தாலும்
                                காதல் தொடரும்


                                தன் துணைக்கு
                                நிஜமான நிழலாய்
                                நிலைத்து நிற்கும்.

                                நினைத்து இணைத்து 
                                வாழும்.

                                கொண்ட காதலில்
                                உண்மையிருக்கும்,
                                உயிரோடு உயிராய்
                                கலந்திருக்கும்!

                                உள்ளம் ஏற்ற காதலில்
                                உறுதியிருக்கும்

                                இல்லற மனதுடன் 
                                மண்ணில் மறைந்தாலும்
                                மனம் வீசும்!

                                இங்கு 
                                கணவன் கட்டிய 
                                நிழலே 
                                தாஜ்மஹால்!
                                ============================================
                                உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
                                 

                                கருத்துகள் இல்லை:

                                கருத்துரையிடுக