செவ்வாய், 6 டிசம்பர், 2011

இதுதான் வாழ்க்கை .


இதுதான் வாழ்க்கை ....
வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே

செல்லும் பாதை இங்கே பார்த்தால்
கல்லும் முள்ளும் கரடும் முரடும்
கண்கள் திறந்தே நாமும் வைத்தால்
காலம் முழுதும் மகிழ்வோமே

உள்ளம் முழுதும் உண்மை வைத்தால்
உன்னை வெல்ல உலகில் எவருமில்லை
வெள்ளம் போலே இன்பம் பொங்கும்
வேறு வாழ்வில் ஏதுமில்லையே

சொல்லச்சொல்ல நீயும் திருந்து
சோகம் தீரும் உன்னைக் களைந்து
சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து
சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக